திங்கள், 25 ஜூலை, 2011

Public Protest against the Genocide of Tamils in Sri Lanka | 23 July | 5 PM | Gandhi Statue | Nellore | Andhra Pradesh


Public Protest against the Genocide of Tamils in Sri Lanka | 23 July | 5 PM | Gandhi Statue | Nellore | Andhra Pradesh


வணக்கம் ,

கருப்பு யூலை, ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் குறுதிபடிந்த மாதமாகும். சிங்கள இனவெறி அரசு 60 ஆண்டு காலமாக புரிந்து வரும் தமிழினப் படுகொலையின் மிக மோசமான காலகட்டத்தின் தொடக்கம் 1983 ஆண்டு யூலை மாதமாகும். 28 ஆண்டுகள் கழித்து இன்று உலகமெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழர்கள் கருப்பு யூலையின் கொடுரத்தை நினைவு கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 2011 கருப்பு யூலை நாளான நேற்று போர்க்குற்றம் இனப்படுகொலைக் எதிரான மன்றத்தின் சார்பாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஈழத்தில் நடந்து வரும் இனப்படுகொலையை கண்டித்தும், போர்க்குற்றம் புரிந்த இராசபக்சே சகோதரர்களை பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லுர்ரின் மையப் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இவ்வார்ப்பாட்ட்த்தில் பெண்கள் உள்ளிட்ட 100 ற்கும் மேற்பட்ட தெலுங்கு பேசும் மக்கள் கலந்து கொண்டு தமிழினப்படுகொலை புரிந்து வரும் இலங்கை அரசிற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

போர்க்குற்றம் இனப்படுகொலைக் எதிரான மன்றத்தின்நெல்லூர் மாவட்டப் பொறுப்பாளர் புரேந்தர் அவர்கள் பேசுகையில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து விட்ட்தாக கூறி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில் இன்றும் தமிழர் வாழும் பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டனத்திற்குரியது. இந்த மன்றத்தின் சார்பாக நெல்லூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,. சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலை குறித்து விளக்கி கூறுவோம் என்றார்.

ஆந்திர குடிமை விடுதலைக் குழு (ஏபிசிஎல்சி) சார்பாக பேசிய ஈ. வெங்கடசுவரலு, இலங்கை அரசு போர்க் காலத்தில் போர் நடந்த பகுதிகளுக்கு ஊடகங்கள் செல்வதை தடைசெய்து வைத்த்து.  ஆனால் போர் முடிந்த் இரண்டாண்டுகளுக்கு பிறகும் ஊடகங்களை தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அனுமதிக்காத்து கண்டிக்கத்தக்கது. போரில் தமிழர்கள் கொல்லப்படும் பொழுது அவர்களை காக்க குரல் கொடுக்க தவறிவிட்டோம். ஆனால் இப்பொழுதாவது அம்மக்களுக்கு நீதி கிடைக்க நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

நெல்லூர் மாவட்ட ஒய் எசு ஆர் காங்கிரசுக் கட்சியை சேர்ந்த அனில் குமார் பேசுகையில், நான் நெல்லூரில் பிறந்திருந்தாலும் படித்து வளர்ந்த்தெல்லாம் தமிழகத்தில் தான். தமிழர்களிடையே மிக நெருங்கிய சகோதர உறவு எனக்கு உள்ளது. நெல்லூர் மாவட்ட ஒய் எசு ஆர் காங்கிரசு சார்பில் இந்த மன்றத்தில் சார்பாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு
நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம் என்றார்.

நெல்லூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கம், நெல்லூர் மாவட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி, சிறப்புப் பொருளாதர மண்டலத்திற்கு எதிரான குழு, தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கான அமைப்பு, நெல்லூர் மாவட்ட மதிமுக, நெல்லூர் மாவட்ட உடை வெளுப்போர் சங்கம், திருக்குறள் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்ட்த்தில் கலந்து கொண்டனர்.

இச்செய்தியினை , தங்கள் ஊடகங்களில் பிரசுரித்து உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு கொண்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

இணைப்பு :ஊடக வெளியீடு ,செய்தி படங்கள்

நன்றி ,
போர்க்குற்றம் இனப்படுகொலைக் எதிரான மன்றம்
தமிழ் நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக