வேறு வழி? திகார் செல்வோரைக் குறைக்கவும் திகாரில் இருப்போரை மீட்கவும் இப்படித்தான் சொல்ல வேண்டி உள்ளது!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
காங்கிரஸூடன் கூட்டணி தொடரும்: கருணாநிதி
First Published : 25 Jul 2011 01:02:38 AM IST
கோவை, ஜூலை 24: மத்தியில் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும்; எனினும் மத்திய அமைச்சரவையில் காலியாக இருக்கும் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 2 இடங்களைக் கேட்கப்போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் - திமுக உறவு, திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் காலியாக இருக்கும் 2 இடங்கள் குறித்து திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. காலியாக இருக்கும் அந்த இடங்கள் திமுகவைப் பொருத்தவரை வெற்றிடமாகவே இருக்கும். அதை நிரப்ப திமுக முயற்சி செய்யாது. இருப்பினும் திமுக தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும். இந்த முடிவு காங்கிரஸ் மீதான அதிருப்தியில் எடுக்கப்படவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் திமுக மீது வெளிப்படுத்தும் அதிருப்தி குறித்துத்தான் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். ஏற்கெனவே உள்ள மத்திய அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார்கள். பொதுக்குழு தீர்மானத்தில் சிபிஐ அமைப்பைக் குறை கூறவில்லை. அந்த அமைப்பில் உள்ளவர்கள் சிலர், உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றுதான் தீர்மானத்தில் கூறியுள்ளோம். ஒவ்வொரு பொதுக்குழு கூடும்போதும் ஊடகங்கள் ஏற்படுத்தும் கலகங்களுக்காக, தலைவரை மாற்ற முடியாது. திமுக சட்டதிட்டத்துக்கு உட்பட்ட கட்சி. உங்கள் இஷ்டத்துக்குத் தலைவரை மாற்ற முடியாது என்றார் கருணாநிதி. பேரவைத் தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம் என பாமக, கொமுக ஆகிய கூட்டணிக் கட்சிகள் கூறியுள்ளனவே என்ற கேள்விக்குப் பதில் அளித்த கருணாநிதி, "நான்தான் காரணம் என்று பொதுக்குழுவிலேயே கூறிவிட்டேன்' என்றார். பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,050 பேர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இவர்தான் தலைவர்! பொதுக்குழுவில் பேசிய தலைவர் ஒருவர் எதிர்காலத்துக்கு ஒரு தலைவரைச் சுட்டிக்காட்டுங்கள் என்று கூறியிருக்கிறாரே என ஒரு நிருபர் கருணாநிதியிடம் கேட்டார். உடனே அந்த நிருபரைப் பார்த்து உன் பெயர் என்ன? எனக் கேட்டார் கருணாநிதி. அதற்கு அவர் தன் பெயரைச் சொல்ல, அந்த நிருபரின் பெயரைக் குறிப்பிட்டு "இவர்தான் திமுகவுக்கு எதிர்காலத் தலைவர்' என்று சிரித்துக் கொண்டே கூறினார் கருணாநிதி. மத்திய அமைச்சர் அழகிரி, பொதுக்குழுவைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளதே எனக் கேட்டதற்கு, "புறக்கணிப்பதாக இருந்தால், இங்கு யாரும் வந்திருக்கமாட்டார்கள். காலை நிகழ்ச்சி முழுவதும் அவர் கலந்து கொண்டார். அதன் பிறகுதான் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்' என்றார் கருணாநிதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக