கட்சி நலனுக்காகத் தமிழினப் படுகொலை காரர்களுடன் உறவு வைத்தமைக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுவிட்டு 3ஆவது அணியினர் செயல்படத் தொடங்க வேண்டும். இல்லையேல் மக்களுக்கு நம்பிக்கை வராது.வை.கோ. தலைமையில் ௩ ஆவதுஅணி அமைந்தால் நாட்டிற்கும் நன்று. அமைப்போர்க்கும் ஆதாயம்.ஆனால், இராமதாசு ஒப்புக் கொள்ள மாட்டார். அவர் மனம் மாறி. வை.கோ.வைத் தலைமை தாங்க அழைக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
மூன்றாவது அணி: பா.ம.க. முடிவுக்கு திருமாவளவன் ஆதரவு
First Published : 30 Jul 2011 01:20:26 AM IST
இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளி என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார் விடுதலைச்
சென்னை, ஜூலை 29: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை அமைக்கப் போவதாக பா.ம.க. அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆதரித்துள்ளார்.இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் திருமாவளவன், வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துகளை திரட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் 10 லட்சம் கையெழுத்துகளை பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை 7 லட்சம் கையெழுத்துகள் பெற்றுள்ளோம். மீதியுள்ள கையெழுத்துகளையும் திரட்டிய பிறகு சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதில், நாடு கடந்த தமிழீழ அரசின் நிர்வாகிகளிடம் அந்தக் கையெழுத்துகளை ஒப்படைத்து, ஐ.நா. சபைக்கு அனுப்ப உள்ளோம். மூன்றாவது அணி: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஒன்றை அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியது. இதற்கான முயற்சிகளை எடுக்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் வலியுறுத்தினேன். எனினும், அது பற்றி கவனம் செலுத்தப்படவில்லை.இந்நிலையில், மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளை எடுக்கப் போவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அந்த அணிக்கு வருமாறு எங்கள் கட்சியை அழைத்தால், கட்சியின் நிர்வாகிகள் கூடி பேசி, உரிய முடிவை எடுப்போம் என்றார் திருமாவளவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக