சனி, 30 ஜூலை, 2011

C.M. opposed the Central Bill : மாநில அதிகாரத்தைப் பறிப்பதா?: மத்திய அரசின் சட்ட வரைவிற்கு முதல்வர் ‌செயலலிதா எதிர்ப்பு

முதல்வர் எடுக்கும் இந்த முயற்சி கொலைகாரப் பேராயக்கட்சியை - காங்கிரசை - ஆட்சியில் இருந்து அகற்றட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மாநில அதிகாரத்தைப் பறிப்பதா?: மத்திய அரசின் மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு

First Published : 30 Jul 2011 01:57:06 AM IST


சென்னை, ஜூலை 29: வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்ட மசோதாவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்த மசோதாவால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்ட மசோதா வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மதச்சார்பற்ற, பல்வேறு மதங்கள் பின்பற்றப்பட்டு, பல்வேறு மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில் வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைக்கு இடமில்லை. உத்தேச சட்ட மசோதா தனது நோக்கத்தை சிறிதும் அடையாது.பல்வேறு அமைப்புகளிடையே இந்த மசோதா நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். குறை கூறுகின்ற, வெளிப்படையாகப் பேசுகின்ற குழுக்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளையும், தங்களது ஏமாற்றங்களை பலவீனமான நபர்கள் மீது காண்பிக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தையும் அதிகாரம் படைத்தவர்களுக்கு இந்த மசோதா அளித்து விடும்.மசோதாவின் பல பிரிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. 20-வது பிரிவு மாநில சுயாட்சியை நேரடியாக பாதிக்கக் கூடியதாக உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எண்ணத்துக்கும், மாநிலங்களுக்கு அதிகளவில் சுயாட்சி கொடுக்க வேண்டும் என்ற சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட இதர ஆணையங்களின் பரிந்துரைகளுக்கும் எதிரானதாக இந்த மசோதா அமைந்துள்ளது.திட்டமிட்ட வகுப்புவாதம், வன்முறைகள் குறித்து மத்திய அரசு மட்டுமே கவலைப்படுவது போன்றும், மாநில அரசுகள் இத்தகைய குற்றங்களுக்கு துணை போவது போன்றும் ஒரு தோற்றத்தை இந்த மசோதா ஏற்படுத்துகிறது.வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை நிகழ்வு அல்லது நிகழ்வதற்குரிய சாத்தியக்கூறு குறித்து தானாகவோ அல்லது கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையிலோ அல்லது வேறு விதமாகவோ விசாரிக்கும் அதிகாரம் இதற்கென அமைக்கப்படும் தேசிய அதிகார அமைப்புக்கு உண்டு.இந்த அமைப்புக்கு மாநில அரசையே நடத்திச் செல்லும் அளவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை குறித்து மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள், தேசிய அதிகார அமைப்புக்குள்ள அதிகாரம், செயல்பாடுகள் மாநில அரசின் அதிகாரங்களை முழுவதும் பறிக்கும் வகையில் அமைந்துள்ளன. இது மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.சட்டம்-ஒழுங்கு நிலை குலையும்: வன்முறைகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம், நஷ்ட ஈடு, இழப்பீடு ஆகியன வழங்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உரியது. இந்த அதிகாரங்களைப் பறித்துக் கொண்டும், அதிகாரத் தோரணையோடும், மேற்பார்வையிடுபவராகவும் தன்னை மத்திய அரசு கருதிக் கொண்டுள்ளதாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது.அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமை, கலகத்தை ஆதரிக்கும் வகையில் சட்ட மசோதா அமைந்துள்ளது. இது, ஒட்டுமொத்த குழப்பம், சட்டத்தின் ஆட்சி இல்லாமை ஆகியவற்றை ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலை குலையச் செய்து விடும்.மாநில அரசுகளை முற்றிலுமாக ஒதுக்கி விட்டு மத்திய அரசுக்கே ஒட்டுமொத்த அதிகாரங்களை வழங்குவதாக இந்த மசோதா அமைந்துள்ளது. இது சட்டமாக்கப்பட்டால் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சதித் திட்டம் தீட்டி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிலையற்ற சூழ்நிலையை உருவாக்கக் கூடிய நிலை ஏற்படலாம்.வன்முறை நிகழ்ந்தால் அதை வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறை எனக் கூறி இந்த சட்டத்தின் பிரிவுகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசு கலைக்கப்படக் கூடும். இது ஜனநாயகத்துக்கு விரோதமான பாசிச சட்ட மசோதாவாகும்.இந்தச் சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே தூக்கி எறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக