மகசேசே விருதுக்கு இரு இந்தியர்கள் தேர்வு
First Published : 28 Jul 2011 02:23:22 AM IST
நிலீமா மிஸ்ரா, ஹரீஷ் ஹண்டே
மணிலா, ஜூலை 27: ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருதுக்கு இந்த ஆண்டு இரு இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.2011-ம் ஆண்டு மகசேசே விருதுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளர். இதில் மகாராஷ்டிரத்தில் ஏழை மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு வரும் நிலீமா மிஸ்ரா, இந்திய கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மக்கள் சூரிய சக்தி விளக்கின் பயனைப் பெற பாடுபடும் பொறியாளர் ஹரீஷ் ஹண்டே ஆகிய இரு இந்தியரும் அடங்குவர்.இந்தோனேசியாவில் இஸ்லாமியப் பள்ளியை நிறுவி பெண் கல்விக்காக உழைக்கும் ஹசனைன் ஜுவாய்னி, இந்தோனேசியாவில் மைக்ரோ நீர்மின்சக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்திய திரி மும்புனி, கம்போடியாவில் ஜனநாயகத்துக்கு போராடி வரும் கெüல் பனா, ஏஐடிஎப்ஐ என்ற அறக்கட்டளையும் இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.விருது வழங்கும் விழா பிலிப்பின்ஸின் தலைநகர் மணிலாவில் வரும் ஆகஸ்ட் 31-ல் நடைபெறவுள்ளது. இதில் 6 பேருக்கும் விருது வழங்கி கெüரவிப்பர்.விமான விபத்தில் இறந்த பிலிப்பின்ஸ் அதிபர் ரேமன் மகசேசேவின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது. 1957-ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, ஆசிய நாடுகளில் மனித மேம்பாட்டுக்காகப் பாடுபடுவோருக்கு அளிக்கப்படுகிறது. இது "ஆசியாவின் நோபல் பரிசு' என்று அழைக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக