புதன், 27 ஜூலை, 2011

வன்முறை, ஆபாசத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை: தமிழக அரசு

பாராட்டுகள். இதற்கு முன்னர் மோசடியாக வரி விலக்கு பெற்ற நிறுவனங்களிடம் இருந்த அளிக்கப்பட்ட விலக்கினைத் திரும்பப் பெறுவது குறித்தும் ஆராயலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வன்முறை, ஆபாச திரைப்படங்களுக்கு வரிவிலக்கு இல்லை: 
தமிழக அரசு
First Published : 27 Jul 2011 12:57:21 AM IST

சென்னை, ஜூலை 26: தமிழ்த் திரைப்படங்களில் "யு' சான்று பெற்ற படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வன்முறை, ஆபாசம் அதிகளவில் இடம்பெற்றிருந்தால் அத்திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் சுநீல் பாலிவால் வெளியிட்ட உத்தரவு:திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்படுவதால் மட்டுமே அவை தமிழ் பண்பாட்டுக்கு உகந்ததாகவும் கண்ணியமானதாகவும் உள்ளன என உறுதி செய்ய இயலவில்லை.சில நேரங்களில், தரமில்லாத திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்படுவதைக் காரணம் காட்டி கேளிக்கை வரியிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றன. எனவே, கேளிக்கை வரிச்சலுகையை திரைப்படங்கள் பெறுவதற்குத் தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதல் தகுதி வரையறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.திரைப்படத் தணிக்கை வாரியத்திடம் இருந்து "யு' சான்று பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக திரைப்படக் கதையின் கரு இருக்க வேண்டும். திரைப்படத்தின் தேவையைத் கருதி பிற மொழிகளைப் பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். புதிய குழு: கேளிக்கை வரிவிலக்கு கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும். திரைப்படங்களைப் பார்வையிட்டு வரிவிலக்குக்குப் பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக