சனி, 29 ஆகஸ்ட், 2009

போரில் தொடர்பில்லாதவர்களை முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும்:
இலங்கை உச்சநீதிமன்றம்கொழும்பு, ஆக.28- போரில் தொடர்பில்லாத பொதுமக்களை முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா அரசு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மேற்கண்ட உத்தரவை இலங்கை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

வன்னியைச் சேர்ந்த சோபிகா சுரேந்திரநாதனும் அவரது பெற்றோரும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குடும்பத்திற்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் மொத்தம் 3 வீடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டதன் அவசியம் என்ன என்பது குறித்து அக்குடும்பத்தினர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, போரில் தொடர்பில்லாத பொதுமக்களை முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மற்ற குடிமக்களைப் போல சமமாக நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளதாக அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

சிங்கள நீதிபதிக்குப் பாராட்டுகள். இந்த நடுநிலை உணர்வு பிற சிங்களர்களிடமும் ஏற்பட வேண்டும். தமிழ்க் குடி மக்களைச் சமமாக நடத்தாத பொழுது அதை எதிர்க்கும் உணர்வு சிங்களர்களிடம் ஏற்பட வேண்டும். ஆனால், மத வெறி பிடித்த குருமார்களும் அதிகார வெறி பிடித்த தலைவர்களும் கொலை வெறி பிடித்த படைத்தலைவர்களும் இதற்கு எதிராகவே இருப்பர். அவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தாலதான் மக்கள் உயிர்கள் காப்பாற்றப்படும். மனித நேயம் மிக்க சிங்களத் தலைவர் எவரும் உருவாவாரா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2009 3:59:00 AM

It is obvious that the World Community is ignoring the atrocities of SLA for their own interests and we from tamilnadu whom the Eelam people had a faith in, have betrayed ! We don't even have the courtesy of a Srilankan judge to save these people!

By Karthi
8/29/2009 2:15:00 AM

How do you know Naveen?. R u either from Chennai or Vavuveeya? - Karikalan P, Villupuram.

By Karikalan P.
8/29/2009 12:13:00 AM

உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வரிசையில் நின்ற மக்கள் இப்போது மரணத்திற்காகவும், கற்பழிக்கப்படுவதற்காகவும் வரிசையில் நிற்கிறார்கள்.

By நவீன் சென்னை
8/28/2009 4:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக