வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

ஆசியாவின் நோபல் பரிசு!



2009-ம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது பெறும் (இடமிருந்து) யூ ஷியோகாங் (சீனா), தீப் ஜோஷி (இந்தியா), கிரிசனா கிரைசிந்து (தாய்லாந்து), மா ஜுன் (சீனா), அன்டானியோ அபோஸô ஜூனியர் (பிலிப்பின்ஸ்), கா ஹிஸô வா (மியான்மர்). பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் பத்திரிகைகளுக்காக வியாழக்கிழமை போஸ் கொடுக்கின்றனர். பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் மறைந்த ராமன் மகசேசேவை கெüரவித்து இந்த விருது அரசுப்பணி, சமூக சேவை உள்ளிட்ட 6 துறைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிய நாட்டவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. பதக்கம் மற்றும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு அடங்கியது இந்த விருது. ஆசியாவின் நோபல் பரிசு என்றே இது கருதப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த தீப் ஜோஷி சிறந்த சமூக சேவகராக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வரும் 31-ம் தேதி முறைப்படி வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக