புதன், 26 ஆகஸ்ட், 2009




நியூயார்க், ஆக. 25: வாய்ப்பு மற்றும் வளர்ச்சியைக் கண்டறிவதே கற்றலின் பலன் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார். செப்டம்பர் 8-ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாகும். அதைமுன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெறுமனே எழுதுவதும் படிப்பதும் மட்டுமே எழுத்தறிவு பெற்றதாகாது. வாய்ப்புகளைக் கண்டறிவதோடு வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும் சர்வதேச அளவில் அனைவரும் எழுத்தறிவு பெறுவதை இலக்காகக் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். இதற்கு உறுதுணையாக தேவையான உதவிகளை அளிப்பதோடு உண்மையான வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். உலகில் மிகுந்த அளவில் வளம் உள்ளது. ஆனால் இந்த உலகில் வாழ கல்வியும், அறிவும்தான் பாஸ்போர்ட் போன்றவை. ஆனால் உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 77.60 கோடி பேர், பெரும்பாலான பெண்கள் அடிப்படை வசதிகளின்றி, எழுத்தறிவில்லாதவர்களாக வாழ்கின்றனர். அத்துடன் 7.50 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். மேலும் பாதியிலேயே பள்ளிக் கல்வியை கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குறைந்தபட்ச கல்வி மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பிரபல கல்வியாளர் டாக்டர் லாலகே குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றை அனைவரும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதை மனதில் கொண்டு இந்த ஆண்டு கல்வியறிவு இயக்கத்தை முழுவீச்சில் செயல்படுத்தவேண்டும் என்றார் பான் கி மூன்.
கருத்துக்கள்

மக்கள் வாழ்ந்தால்தானே கல்வியும் அறிவும் பெற வாய்ப்பு ஏற்படும். ஈழத் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகவும் வஞ்சகமாகவும் கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் உயிரோடு புதைக்கப்பட்டும் கொல்லப்பட்டது கண்டு அமைதி காத்து உடன்பட்ட பான்கி மூன் யாருக்கும் அறிவுரை கூறத் தகுதியற்றவர். ஐ.நா.பொதுச் செயலர் பதவியை விட்டு விலகும் வரை வாயை மூடிக் கொண்டிருந்தால் போதுமானது.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/26/2009 4:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக