சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மெட்ரிக், நர்சரி பள்ளிகள் சங்க மாநாட்டில் வழங்கப்பட்ட, வெள்ளி வாளுடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. உடன், (வலமிருந்து
சென்னை, ஆக. 22: சமச்சீர் கல்வி, கல்வித் தரத்தையும் உயர்த்தும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கம், தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கம் இணைந்து சனிக்கிழமை நடத்திய 39-வது மாநில மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது: "சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்தினால் கல்வி தரம் குறைத்து விடும் என்பதை ஏற்க முடியாது. செயல்வழிக் கல்வியை, நடைமுறைப்படுத்தியதால் அதன் செயல்பாடுகளை மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். காலை முதல் மாலை வரை பள்ளியில் படித்து விட்டு, அதன் பின், வீட்டுக்கு வந்து பாடங்களை எழுத வேண்டிய நிலை உள்ளது. எனவே, அவர்களுக்கு விளையாட நேரம் இல்லாத நிலையில் உலக விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாத சூழலை உருவாகிக் கொண்டிருக்கிறது. டாக்டர்கள், பொறியாளர்கள் அதிகமானோரை உருவாக்கிய போதிலும் சமூகத்துக்கு மற்ற திறனுடைய வல்லுநர்களும் அதிகம் தேவைப்படுகின்றனர். யார் யாருக்கு என்ன திறமை எனக் கண்டறிந்து தன்னம்பிக்கையூட்டி அதனை வளர்க்க வேண்டும். ஆசிரியர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இப்படித்தான் பாடங்களை நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. ஆகையால், புதிய திட்டங்களை ஆய்வு செய்து அறிமுகப்படுத்தி மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்பை வளர்க்க வேண்டும் என்றார் கனிமொழி. இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை, தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சங்கத்தின் தலைவர் முத்தையா சக்தி, பொருளாளர் ரத்தினமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்
சமச்சீர் கல்வி, கல்வித் தரத்தை உயர்த்தும் - தமிழ் மொழி வழிக் கல்வியாக இருந்தால். எனவே இக்கருத்தையும் கனிமொழி வலியுறுத்துவாராக! மற்றொரு செய்தி:வெள்ளிவாள், பொன் வாள், முதலியன வற்றை வழங்க அரசு தடை விதிக்க வேண்டும். ஆனால், எல்லாத் தலைவர்களுக்கும் இவ்வாறு பெற ஆசை இருப்பதால் தடை செய்யுமா எனத் தெரியவில்லை. வெள்ளி வாளுக்கு மாற்றாகத தங்கத்தினால் ஆன எழுதியை - பேனாவை - வழஙகலாமே! வன்முறைக்கு அடையாளமான எதையும வழங்கக்க கூடாது எனவும் பெறக் கூடாது எனவும் அமைப்புகளும் தலைவர்களும் முடிவெடுத்தால் நல்லது.
அன்புடன் இலககுவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2009 5:46:00 AM
8/23/2009 5:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்