வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

தமிழகமெங்கும், நேற்று புதன்கிழமை (26.08.09) "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடந்தன.


கடந்த யூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட "தமிழ்த்தேசியம்" சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் "தமிழ்த் தேசிய எழுச்சி" நாளாக கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.


தமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும், ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.


தங்சை, சென்னை, சிதம்பரம், ஈரோடு, மதுரை, ஓசூர், திருச்சி, கோவை, திருத்துறைப்புண்டி, ஆத்தூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் எழுச்சியாக நடைபெற்றதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக