வியாழன், 27 ஆகஸ்ட், 2009

இலங்கை ராணுவம் நடத்திய ரத்த வெறியாட்டங்கள் அம்பலமாகும்: வைகோசென்னை, ஆக. 26: தமிழர்களைக் கொன்று குவிப்பதில் இலங்கை அரசு நடத்திய ரத்த வெறியாட்டங்கள் அம்பலத்துக்கு வந்தே தீரும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ் இனத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கோடு இலங்கை ராணுவம் கோரப் படுகொலைகளை நடத்தியது என்று நாம் தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டுகளுக்கு இப்போது மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது. அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டனை சேர்ந்த "சேனல் 4' என்ற தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி கடந்த திங்கள்கிழமை ஒளிபரப்பியுள்ளது. அந்த இளைஞர்களை முழு நிர்வாணமாக்கி, கைகளை பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, தரையில் உட்கார வைக்கப்பட்டு அவர்களின் தலையிலும், பிடரியிலும், முதுகிலும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் அத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம்பெற்றுள்ளன. அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து அவர்கள் துடிதுடிக்க இறப்பதையும் பார்க்கும்போது, நம் உள்ளம் வேதனை அடைகிறது. தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து கொல்வதும், தமிழ்ப் பெண்களை கற்பழித்து கொல்வதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் அன்றாட நிகழ்வுகளாக நடந்து வந்துள்ளன. இந்த துன்பமான நேரத்தில், உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனம் தளர்ந்து விடாமல், நம் இனத்தைக் காக்கவும், கொடுமை செய்தோரை கூண்டில் ஏற்றவும் பாடுபடுவோம் என வைகோ அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

மக்கள் நேயத்திற்கு எதிராகச் சிங்கள- இந்தியக் கூட்டுப் படுகொலைகளுக்கும் இனப் பேரழிவுகளுக்கும் ஆதரவாக அடுத்தவர் பெயர்களிலும் போலிப் பெயர்களிலும் எழுதுவோர் மீது உடனே நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும். வைகோ அவர்களே! நீங்கள் உலக நாடுகளுக்கு மக்கள் நேயத் தூதராகச் சென்று இப்படுகொலைகளுக்கு எதிரான கருத்தாக்கத்தைத் திரட்டுங்கள். சிங்கள - இந்திய - தமிழகக் கூட்டுக் கொலைக் கும்பலுக்குத் தண்டனை வழங்கச் செய்யுங்கள்! இதுவே நீங்கள் செய்ய வேண்டிய முதற்பணியாகும்.

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/27/2009 4:58:00 AM

Raja removed terrorism from his country. When India is going remove the supporters ?

By Alphonse, USA
8/27/2009 3:36:00 AM

Rayya, Ravi, MohanaSundaram, Pererra..are paid commentators against Tamils. So Tamils should awake and write against these scoundrels before they permanently fool others. See this Rayya is protecting SL by supporting cruel human slaughters. So each and every Tamil should defend themselves ever more to defeat these enemies of humanity. otherwise we'd be lost, for bad. Salutes to Vaiko for fighting for rights.

By kiran
8/27/2009 2:34:00 AM

THERE ARE MANY PRO-SINGALAVA DOGS SPEAKING ABOUT INDIAN UNITY. FIRST WE ARE TAMILS & WE HAVE ALL THE RIGHTS TO PROTECT THE WELFARE OF MY BLOOD WHER EVER IN THE WORLD. SO THESE ETTAPPANS SHOULD STOP THEIR PREACHINGS.

By Paris EJILAN
8/27/2009 1:57:00 AM

First of all you should be put in jail.You always speak against Indias unity. Why cannot you go to srilanka and give your life for them.If you have courage go to Rajapakshey and talk to him directly If you not give sound for your reveived money from LTTE they will blow Sangu for you. Pavan payathil appapa ularrungal. Sound inga vidatheynga . our true colour already known to world.

By rayya
8/27/2009 1:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக