வியாழன், 27 ஆகஸ்ட், 2009
லண்டன், ஆக. 26: தம்மிடம் சிக்கிய ஒன்பது தமிழர்களை சித்திரவதை செய்து ஈவிரக்கமில்லாமல் இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்துள்ளது. விடியோவில் பதிவான இந்த கொடூர சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த "சானல் 4' தொலைக்காட்சி புதன்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது. அந்த ஒன்பது பேரும் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை ஒரு ராணுவ வீரரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த விடியோ, ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் அமைப்பு மூலம் சானல் 4 தொலைக் காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடியோ காட்சி நிஜமானதல்ல என்றும் இத்தகைய ஈவிரக்கமற்ற கொடிய செயலில் தமது ராணுவம் ஈடுபடவில்லை என்றும் இலங்கை மறுத்துள்ளது. சானல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சியை அடுத்து கொழும்புக்கு எதிராக கூறப்பட்டு வந்து போர்க்குற்றப் புகார்கள் சூடு புடித்துள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போரின்போது பிடிபட்ட புலிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதைக்குள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்று வருவதாக மனித உரிமைகள் அமைப்பும் இலங்கைத் தமிழர்களும் புகார் கூறிவந்தனர். சமாதானம் பேசுவதற்காக வெள்ளைக்கொடி பிடித்தபடி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் மற்றொரு தலைவர் சீவரத்தினம் பூலிதேவன் ஆகியோரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக மே மாதத்தில் செய்திகள் வெளியாகின. தலைப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுக்கிடந்த புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இருக்கும் படத்தை அரசே தனது விடியோவில் வெளியிட்டது. இலங்கைக்கு எதிரான போர்க்குற்றப் புகார்கள் உண்மைதான் என்பதை சானல் 4 ஒளிபரப்பிய விடியோ நிரூபிப்பது போல அமைந்துள்ளது என்று தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனவரியில் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளை ஒடுக்கி நிர்மூலமாக்கிய இலங்கை ராணுவம், பிடிபட்ட போர்க்கைதிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்றதை ராணுவ வீரர் ஒருவரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார் என்று இந்த விடியோவை ஒளிபரப்பிய சானல் 4 தொலைக்காட்சி கூறியுள்ளது. ஆனால் இந்த விடியோ காட்சியை தமக்கு எதிரான அவதூறு புகார் என்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர்களுக்கு எதிராக எந்த கொடிய சித்திரவதை செயல்களிலும் ராணுவம் ஈடுபட்டதில்லை. விடியோவில் தில்லுமுல்லு செய்தும் பொய்யான ஆவணங்களையும் வெளியிட்டு இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்கள் கடந்த காலங்களில் பல முறை நடந்துள்ளன. எனவே இந்த விடியோ பற்றி தீர ஆராய்ந்து உண்மையை உறுதி செய்யவேண்டும் என்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விடியோ காட்சி இலங்கை ராணுவ வீரர் ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்

இந்தச் சான்றுகள் எவையும் இல்லாமேலேயே கொடுமைகள் எவ்வாறெல்லாம் நிகழ்ந்திருக்கும் எனச் சோனிய-மன்மோகன்-நாராயணன்-மேனன் கூட்டமும் முத்தமிழறிஞரும் உணர்ந்திருப்பர். இருப்பினும் இவை அவர்களை நம்பும் அப்பாவித் தமிழர்கள் இனியேனும் மனம் மாறுவார்களா என்பதற்காகத்தான். சிங்களமாக இருந்தாலும் ஈழமாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் தமிழகமாக இருந்தாலும் கொடூரக் கும்பல்கள், துணை நின்றவர்கள் ஆட்சியில் இருப்பது அழகன்று; முறையன்று; அறமன்று;நீதியன்று; சிறப்பன்று; வரலாறு இவர்களை ஆள விட்ட மக்களையும்தான் தூற்றும்; பழி கூறும்; இகழும். மானமுள்ள மக்களே! மனித நேயமுள்ள மக்களே! கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டாவா? இனி ஒரு முறை எந்த நாட்டானும் இப்படிப்பட்ட படுகொலைகளைச் செய்யாதிருக்கப் பாடம் புகட்ட வேண்டாவா? சிந்தியுங்கள்! துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/27/2009 4:47:00 AM

Dear Sonia Here is the movie for your weekend. Enjoy with your family. Thank you

By mill
8/27/2009 4:31:00 AM

Singalavan Thiruntha maattaan innoru Pirabaharan Vanthaalthaan itharkku mudivu kidaikkum karunanithi karuppu kannaadi pottu irukkaan ithellam avanukku theriyaathu

By velan
8/27/2009 4:26:00 AM

This is real evidence of Genocide.What in the world UN is stilldoing to say they are to protect the humans.When it happended in 1992 in Serbia Bosnia UN jumped up and down and they removed President Rodowan Kardic.Is the UN paid by the Singalese genocide bastards Raja Pakshe brothers?The world is round and karma is still around what goes around from someone comes back to get them.Sinaglese genociders will pay for this soon or latter.

By Karthik
8/27/2009 4:10:00 AM

This is not your cinema. This is reality for us. I do not think that most of you understand our pain. The same thing will happen to you in a few years time unless you defend yourself properly against the Hindi speaking north Indians. These north Indians & Maliyalees helped the Singhalese to suppress our freedom struggle. .

By Deva
8/27/2009 4:02:00 AM

This is not your cinema. This is reality for us. I do not think that most of you understand our pain. The same think will happen to you in a few years time unless you defend yourself properly against the Hindi speaking north Indians. These north Indians & Maliyalees helped the Singhalese to suppress our freedom struggle. .

By Deva
8/27/2009 3:56:00 AM

hi i am a ella thamilan from canada,, after u guys watched this horrific video how could u bein silent. pls thamil nadu people do somethin to stop killing my brothers and sisters, u could do that pls i beg you. elavan from toronto canada

By elavan
8/27/2009 3:43:00 AM

DO NOT SUPPORT LTTE. THEY KILLED MANY TAMILS.. INCLUDING MATHAYA, AMIRTHALINGAM... MANY TAMIL NADU POLICE

By Alphonse, USA
8/27/2009 3:42:00 AM

தயவு செய்து அந்த வீடியோ காட்சியயை தமிழினத் துரோகிகள் கிழவன் கருணாநிதிக்கும், மொடந்தலையன் தங்கபாலுவுக்கும் போட்டு காட்டுங்க! இன்னொண்ணு, அவா பத்திரிகையிலே வழக்கம்போல சாமி படத்தை போட்டு இந்த செய்தியை இருட்டடிச்சிட்டாங்க! வாழ்த்தி எழுதினா மாத்திரம் கருத்துக்களை பிரசுரிப்பாங்க. அவங்க பாணியே தனி!

By MKSamy
8/27/2009 3:37:00 AM

நண்பர்களே youtube இல் ஏற்றப்படும் தமிழின அழிப்பு ஆதார காணொலிகளை எதிரிகளின் கூட்டம் அழித்து செயலிழக்க வைக்கின்றான். ஆகவே தயவுசெய்து நீங்களும் ஒரு பாவனையாளராக இணைந்து இக்காணொலிகளை இணைப்பதோடு நின்றுவிடாது youtube நிர்வாகத்திற்கும் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இவை போன்ற அனைத்து இணையங்களிற்கும் அனுப்பிவையுங்கள். நன்றி

By Friends of Eelam
8/27/2009 3:33:00 AM

Indian and Srilankan Governments 're big liers over Tamils issue;India has obstructed United Nations to intervene the inquiary of the mass muder Tamil civilians and to bring the mass killing to the international court. If the international court or the United Nations inquire Mr. Pranab Mugargee , the former foreign minister of India, he will tell all secrets plan to the world. Pranab mugargee is the blacksheep for the disaster.

By David, Mumbai
8/27/2009 3:24:00 AM

TAMIL people PLEASE think………… Mass killings pogroms against Tamils in 1956, 1958, 1977, 1981 and 1983. Over 3,000 Tamils were killed in 1983 alone and still continue. More than 100,000 Tamils killed from 1983. TAMIL people PLEASE think….. Indian weapons to kill our TAMIL BROTHERS, SISTERS and CHILDREN….……. For example…… 1983: Welikade Prison Massacre, 1985: Valvettithurai Massacre, 1985: Vavuniya Massacre, 1985: Tiriyai Massacre, 1986: Iruthayapuram Massacre, 1986: Akkarapattu Massacre, 1987: Kokkaddichcholai Massacre , 1990: Saththurukkondan Massacre, 1992: Mylanthanai Massare, 1995: Chemmani Massacre, 1997: Kalutara prison Massacre, 2000: Bindunuwewa rehabilitation camp Massacre, 2000: Kumarapuram massacre, 2001: Mirisuvil Massacre, 2006: Allaipiddy Massacre, 2006: Muthur Humanitarian Aid workers Massacre ……………………..

By Vani Kumar, London, UK
8/27/2009 2:48:00 AM

To ALL TAMILS: Tigers release 6 Singhalese soldiers on 18th May 2009 unharmed. NOW you can decide Who are Terrorists and Who are FREEDOM FIGHTERS !!!!!!!!!!!!!!!!!!!!!!.

By Vani Kumar, London, UK
8/27/2009 2:46:00 AM

Our PAIN cannot be EXPRESSED in WORDS. I have lost 14 of my relatives (including my parents) in April 2009.

By Kugathasan Satkunam
8/27/2009 2:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து: