சென்னை, ஆக. 28: பனையூர் இரட்டைக் கொலை குறித்து விசாரிக்கும் அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சிபிசிஐடி போலீஸôர் சம்மன் அனுப்பியுள்ளனர்.சென்னை நீலாங்கரை பனையூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ரமணி ஆகியோர் கடந்த திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக பொதுமக்கள் மூலம் போலீஸôரிடம் பிடிபட்ட ராஜன் (எ) சண்முகசுந்தரம் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.விஜயகாந்த் அறிக்கை: இந்த நிலையில் பனையூர் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக தேமுதிக தலைவர் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.""திமுக அரசில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் முக்கிய பிரமுகர் களின் உறவினர்கள் செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாகவும், அதனால், இந்தக் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள், துப்பாக்கிகள், உடன் வந்தவர்கள் என்று எல்லா தடயங்களும் மறைக்கப்பட்டுவிட்டதாக பேச்சு அடிபடுகிறது'' என அந்த அறிக்கையில் விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார்.சிபிசிஐடி சம்மன்: இந்த அறிக்கை தொடர்பாக வெளியான செய்திகள் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸôர் விஜயகாந்த்துக்கு சம்மன் அனுப்பினர்.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பான விவரங்களை இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரி முன் நேரில் ஆஜராகி தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.விஜயகாந்த் ஆலோசனை: இந்த சம்மனை தொடர்ந்து அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தேமுதிக மூத்த நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.டி.ஜி.பி. அறிக்கை: இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:பனையூர் இரட்டைக் கொலை வழக்கு முதல் கட்ட விசாரணையில் இருந்துவரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.மேலும், சில அரசியல் கட்சித் தலைவர்களும், இவ்வழக்கு விசாரணை தொடர்பாக தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற தகவல்களால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் ஏதும் தெரிந்தவர்கள் அதை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.அதைவிடுத்து, மனம் போன போக்கில் தேவையற்ற வதந்திகளை பரப்புவது போன்றவை இவ்வழக்கு விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும்.வழக்கு விசாரணையின்போது, இறந்த ராஜன் (எ) சண்முகசுந்தரத்தின் சடலம் காவல்துறையினரின் உதவியோடு எரிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுவது தவறான, விஷமத்தனமான ஒன்று என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அப்படிப் போடு அரிவாளை' என்பார்கள்.'எடுத்தேன கவிழ்த்தேன்' என்பது போல், இனி யாரும் வாய்க்கு வந்தபடி எதையும் பேசமாட்டார்கள். காவல்துறையும் தன் விருப்பில் திரியலாம். பரபரப்புச் செய்திகளுக்குத் தீனிதான் கிடைக்காமல் போகும்.--- இலக்குவனார் திருவள்ளுவன்