செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

காலி துறைமுகத் தாக்குதலுக்கு பயன்படுத்திய படகு அம்பாந்தோட்டையில் கண்டுபிடிப்பு
பிரசுரித்த திகதி : 24 Aug 2009

வன்னியில் தாம் கைதுசெய்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், 2006ம் ஆண்டு காலி துறைமுகத்தை தாக்கப் பயன்படுத்திய (ரோலர்) இழுவைப் படகைத் தாம் அம்பாந்தோட்டையில் கண்டுபிடித்துள்ளதாகவும், அக்கரைப்பற்றில் இருந்து அசோக் லேலாண்ட் வாகனம் ஒன்றை மீட்டுள்ளதாகவும் இலங்கைப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

2006ம் ஆண்டு இந்த இழுவைப் படகைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் காலி துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், பின்னர் இந்தப்படகு பத்திரமாக அம்பாந்தோட்டை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

செயற்கைக் கோள் உதவியுடன் கடலில் பயணிக்கக் கூடிய வசதி பொருந்திய இந்த இழுவைப்படகு எவ்வாறு அம்பாந்தோட்டையில் தரித்து நின்றது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
தாம் கைது செய்துள்ள நபரிடம் தொடர்ந்தும் பல விசாரணைகளை நடத்திவருவதாக போலீசார் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து அதிர்வின் நிருபர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக