ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

"நாம் தமிழர் இயக்கம்' அரசியல் இயக்கமாக மாறும்:
இயக்குநர் சீமான்



தூத்துக்குடி, ஆக. 22: "நாம் தமிழர் இயக்கம்' 2010-ம் ஆண்டில் அரசியல் இயக்கமாக மாறும் என, இயக்குநர் சீமான் தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை ஐ.நா. மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தக் கோரியும், "நாம் தமிழர் இயக்கம்' சார்பில் ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம். அடுத்ததாக இம்மாதம் 29-ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். தமிழ் இனம், மொழிக்காக போராடுவதற்காக கடந்த மே மாதம் உருவானதுதான் "நாம் தமிழர் இயக்கம்'. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது இந்த இயக்கம். தமிழ் இனம் மற்றும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம் என்றார் சீமான்.
கருத்துக்கள்

சீமானின் முயற்சி வெல்க! உலகத் தமிழர்களை ஒற்றுமைப்படுத்தவும் எங்கு வாழ்ந்தாலும் உரிமையுடன் வாழவும் பிற இனத்தவருடன் ஒத்து வாழவும் முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெறுக! தமிழ் ஈழம் உலக அரசுகளால் ஏற்கக் கடமை யாற்றுக! 'தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்! தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்' என்னும் பேராசரியர் சி.இலக்குவனாரின் பொன்மொழியை இலக்கு மொழியாகக் கொண்டு செயல்பட்டு மொழியும் இனமும் உரிமை பெற்று இலங்கப் பாடுபட்டு உயர்க! வெல்க! ஓங்குக!

வாழ்த்துகளுடன் இலககுவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2009 3:39:00 AM

The first religion is landuage(Thamizh). All other religions are secondary. World over countries are formed based on language which as said before is the religion. That is the logic for existence of a country. It brings with it the culture. It brings with it the oneness. It brings with it pride. To keep up the pride the people will be united and work towards a common goal. If somebody is going against this logic, then he is an obvious 100% idiot, Kudhuramutta, komali, simpleton, fool.

By anban
8/23/2009 1:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக