சனி, 29 ஆகஸ்ட், 2009

சர்வதேச சட்டத்தை மீறும்
அச்சம் நிறைந்த வீடியோ -
ஐ.நா நிபுணர்
பிரசுரித்த திகதி : 29 Aug 2009

இலங்கை ராணுவத்தினரின் இன அழிப்பு வீடியோவானது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற திகிலூட்டும் பயங்கர வீடியோ எனக் கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்.

கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் வீடியோவானது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற ஒரு இன அழிப்பு நடவடிக்கை என விவரித்துள்ளார் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன சிறப்பு தொடர்பாளரான பிலிப் ஆல்ஸ்ரன். இந்த வீடியோவை மறுத்து தாம் அப்படியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என அரசாங்கம் மறுத்தால், அதற்கு எதிராக சர்வதேச சமூகமானது விசாரணை நடத்துவது மிக எளிதாகிவிடும் என்றும், அரசாங்கத்தைப் பழிவாங்கலாம் என்றும் அவர் மேற்கொண்டு கூறியுள்ளார்.

அண்மைக்காலங்களில், இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக ஆல்ஸ்ரன் பல முறை அனுமதி கேட்டிருந்தபோதும், அரசாங்கம் தனக்கு அனுமதி தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2009, மே 9 ஆம் திகதி ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் தொடர்ந்து பொதுமக்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அங்கு என்ன நடக்கிறது அதைப்பற்றிய விவரம் ஒன்றுமே அறிய முடியாதுள்ளமை பற்றியும் தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமது கருத்தையும் எழுதியுள்ள அல்ஸ்ரன், இலங்கை அரசானது ஊடகவியலாளர்களையோ, மனிதாபிமான கண்காணிப்பாளர்களையோ அங்கு அனுமதிக்காமல் இருப்பதானது கடந்த மூன்று மாதத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதன் காரணமாகத் தான் எனக் கூரியுள்ளார்.

2009, மே 29 ஆம் திகதிய பிரிட்டிஸ் த ரைம்ஸ் பத்திரிகையானது, கடைசிநேர போரில் குறைந்தது 20,000 மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள வேளை, ஐ.நா இன் ரகசிய அறிக்கையில் ஏப்பிரல் மாத முடிவில் மட்டும் 7,000 மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக