ராகுல் காந்தியுடன் கைகோர்க்கும் நடிகர் விஜய் விபரீதம் ஆரம்பம் ? |
பிரசுரித்த திகதி : 26 Aug 2009 |
ஜங்கரன் இன்டர் நேசனல் நிறுவனம் ஊடாக இநடிகர் விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் புலம் பெயர் இலங்கைத் தமிழர்களால் விரும்பிப் பார்க்கப்படுவதுடன் கோடிக்கணக்கான வெளிநாட்டுக் காசை தயாரிப்பாளர்கள் இதன்மூலம் பெற்றுவருகின்றனர். இந் நிலையில் ஈழ யுத்தத்திற்கு இந்திய மத்திய அரசான காங்கிரஸ், இலங்கையுடன் கைகோத்து ஆயுத உதவிகளையும், புலனாய்வு உதவிகளையும் வழங்கியதும் இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும் யாவரும் அறிவர். இந் நிலையில் நடிகர் விஜய் எந்தத் துணிச்சலில் சோனியாவுடன் கைகோக்கிறார் என்பது ஆச்சரியமூட்டுகிறது. ஜங்ரன் இன்டர் நாசனல் நிறுவனம் விஜய்யை வைத்து பல படங்களை எடுத்துள்ள நிலையில் மேலும் சில படங்கள் நடிக்க நடிகர் விஜய் ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும் இந்தப் புதுச் சர்சை கிளம்பியுள்ளது. இவரது இந்த நடவடிக்கை ஈழத் தமிழர்களையும் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் இது பாதித்துள்ளது. இனி வரும் காலங்களில் நடிகர் விஜய்யின் படங்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவும் வாய்ப்புண்டு. இதனால் இவர் தனது நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பதில் கூறவேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள் |
வியாழன், 27 ஆகஸ்ட், 2009
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1251297309&archive=&start_from=&ucat=12&
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக