திங்கள், 20 ஜூலை, 2009

விடுதலைப் புலிகளின் சொந்தத் தயாரிப்பான நீர்மூழ்கி வாகனம் கண்டுபிடிப்பு
பிரசுரித்த திகதி : 19 Jul 2009

நேற்று(18) இரவு 56வது படைப்பிரிவினரும் T- 8 படைப்பிரிவினரும் இணைந்து வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டிருந்ததாகவும். கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்பில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி வாகனம் பாவனைக்குகந்த நிலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

சுமார் 24 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இந்த நீர்மூழ்கி வாகனத்தின் மேலதிக விபரங்களை வெளியிட இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இருப்பினும் சுமார் 6 பேர் பயணம் செய்யக் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக