வியாழன், 23 ஜூலை, 2009

தமிழர்களை இந்தியக் குடிமக்களாக மத்திய அரசு கருதுகிறதா? - தொல். திருமாவளவன்சென்னை, ஜூலை 22: "தமிழ்ப் பேசும் இந்தியர்களை, இந்தியக் குடிமக்களாக மத்திய அரசு கருதுகிறதா இல்லையா?' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல். திருமாவளவன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.மக்களவையில் அவர் பேசியது:பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கென நம் நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் இருந்து 44 ஆயிரம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக் கிராமங்களில் வாழும் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். ஒரு தலித் சில கிராமங்களில் உள்ள பொது இடம், கோவில்களில் நுழைய முடியவதில்லை. தலித் ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராகச் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.இலங்கை அரசிடம் ரூ.500 கோடி தரக்கூடாது: இலங்கையில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி கொடுமையான பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களை நேரடியாகச் சென்றடைய உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த நிதியை இலங்கை அரசின் கைகளில் ஒப்படைக்கக் கூடாது. முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி வரும் 3 லட்சம் தமிழர்களை அவர்களுடைய சொந்த இடத்திற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். சிங்களக் குடியேற்றம் ஓய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதை இந்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.தமிழர்கள் மீது அக்கறை உள்ளதா? இந்தியாவின் குடிமக்களாக இருக்கும் தமிழர்கள் மீதாவது மத்திய அரசுக்கு அக்கறை உள்ளதா? என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த 25 ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் 300 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், ஒரேயொரு முறை கூட மத்திய அரசு இலங்கையைக் கண்டித்தது கிடையாது. எச்சரிக்கைக் கூட செய்ததில்லை.தமிழ்ப் பேசும் இந்தியர்களை இந்தியக் குடிமக்களாக மத்திய அரசு கருதுகிறதா இல்லையா? இது தமிழர்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தமிழக முதல்வர் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்காக குரல் கொடுத்தார். சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். தில்லிக்கே வந்து பிரதமரிடம் முறையிட்டார். ஆனால், இந்திய அரசு இவற்றைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதுதான் இங்குள்ள தமிழர்களை இந்தியக் குடிமக்களாகக் கருதுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இலங்கையின் தமிழர் விரோதப் போக்கிற்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.
கருத்துக்கள்

எனவே, அவர் இந்திய அரசின் குருதியில் கலந்துள்ள தமிழ்ப்பகைப் போக்கை நீக்க உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அன்னை சோனியா திமுக வின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டா.

-இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 3:54:00 AM

தமிழர்களை விடச் சிங்களர்களையே உறவினர்களாகவும் ஆருயிர் நண்பர்களாகவும் இந்திய அரசு கருதுகிறது என்பது அனைவரும் அறிந்ததே!முதல்வரின் போர் நிறுத்தக குரல் அவரது குடும்பத்தினரின் அமைச்சுப் பதவிகளுக்காகக் கொடுத்த குரல் போன்ற வலிமையாக இல்லாமல்தான் அவலம் ஏற்பட்டது என்பதும் அனவைரும் அறிந்ததே! கேட்டவாறு அமைச்சுப்பதவி இலலை என்னும் நிலை வந்த பொழுது 'மீண்டும் வடக்கு வாழ்கிறது ;தெற்கு தேய்கிறது' என்று குரல் எழுப்ப வேண்டுமா' என்றும் 'வெளியில் இருந்து ஆதரவு' என்றும் தெரிவித்த த.இ.தலைவர், போர் நிறுத்தத்தின்பொழுது அவ்வாறு தெரிவிக்காமல் நாராயணன்களின் குரலைக் கேட்டு தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரனைக் கைது செய்தால் எவ்வாறு நடத்த வேண்டும் எனக் கொச்சையாகப் பேசியதையும் அனைவரும் அறிவர். எனவே, திருமா அவர்கள் அவரை மேற் கோளாகக் காட்டாமல் உண்மையான இன உணர்வையும் மனித நேய உணர்வையும் வெளிப்படுத்திப் பேசினால் போதும். இல்லையேல் இவரது கருத்திற்கும் மதிப்பில்லாமல் போகும். எனவே, அவர் இந்திய அரசின் குருதியில் கலந்துள்ள தமிழ்ப்பகைப் போக்கை நீக்க உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அன்னை சோனியா திமுக வின

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 3:53:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக