வெள்ளி, 24 ஜூலை, 2009

இலங்கை அகதிகள் 2}வது நாளாக உண்ணாவிரதம்



செங்கல்பட்டு, ஜூலை 23: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 63 பேர் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். க்யூ பிரிவு போலீஸôரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள், தங்களை வழக்குகளில் விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி பாலசுப்ரமணியம், க்யூபிரிவு டிஎஸ்பி விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் ஆல்பர் வில்சன், வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையில் நம்பிக்கையில்லாமல் தமிழக அமைச்சர்கள் அல்லது முதலமைச்சரின் பிரதிநிதியாக யாராவது வந்து தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் அப்பொழுது தான் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் இப்போது யார் பேசினாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு உடன் பட மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்பி பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் அகதிகள் முகாமில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழக அரசு இவர்களை மட்டும் தொடர்ந்து வதைமுகாம்களில் அடைத்து வைப்பது முறையன்று. தமிழக ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் நாட்டுப்பற்றை மெய்ப்பிப்பதாக எண்ணிக் கொண்டு இந்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு அறமற்ற முறைகளில் தடுத்து வைப்பது முறைதானா? இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைப் பொருள்களை வழங்கியதைக் கூடக் கடுங்குற்றமாகக் கருதி வதைப்பது முறைதானா? எனவே, தமிழக அரசு இவர்களின் கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அப்பாவிகளை விடுவிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் இச்சிக்கலில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் மூலமாக நீதி கிடைக்க உடனே உதவ வேண்டும். அப்பாவிகளின் துயர நிலை கண்டு வருந்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 3:52:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக