தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மக்கள் குரல் கொடுத்திருந்தால் போர் நிறுத்தப்பட்டிருக்கும்: இயக்குநர் சீமான் |
[ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2009, 03:34 பி.ப ஈழம்] [க.நித்தியா] |
இந்த மண்ணில் யாருக்கும் தமிழர்களின் துயர் துடைக்க ஆசை இல்லை. ஆறரை கோடி தமிழர்களில் 30 லட்சம் தமிழர்களாவது ஒரே இடத்தில் நின்று குரல் கொடுத்து இருந்தால் அங்கு போர் நிறுத்தப்பட்டு இருக்கும் அதை நாம் செய்யாதது பெரிய துரோகமாகும் என தமிழின உணர்வாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார். |
இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க அந்த 'முள்வேலியை அகற்றுவோம் வாரீர்' என்ற முழக்கத்தோடு இயக்குநர் சீமான் தலைமையில் தமிழ்நாட்டின் மதுரையில் நேற்று சனிக்கிழமை ஊர்வலம் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது: காயம்பட்ட எங்கள் இனத்தை காப்பதற்காகதான் இந்த கூட்டம். அடுத்த நடவடிக்கை என்ன? இன்னும் நாம் விழிக்கவில்லை என்றால் என்ன ஆவோம்? என்பதை விளக்கதான் இந்த கூட்டம். இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடி இருப்பதற்கு காரணம் 'நாம் தமிழர்' என்ற உணர்வு இன்னும் இருப்பதால்தான். முள்வேலிக்குள் இருக்கும் தமிழர்கள் தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் சிங்கள வெறியன் சிறுநீரை கொடுக்கும் நிலை உள்ளது. சினிமாவில் ஒரு மிருகத்தை வைத்து படம் எடுத்தால் கூட முடிந்ததும் அந்த மிருகம் உயிருடன் இருக்கிறதா? என்று கேட்டுவிட்டுதான் தணிக்கை குழு சான்றிதழ் தருகிறது. சித்திரவதை இருக்கக்கூடாது என்ற சட்டம் இருக்கும் இந்த தேசத்தில், அங்கு கொடுமைக்கு ஆளாகும் மக்களை ஏன் காப்பாற்ற மனம் வரவில்லை. இந்த மண்ணில் யாருக்கும் தமிழர்களின் துயர் துடைக்க ஆசை இல்லை. ஆறரை கோடி தமிழர்களில் 30 லட்சம் தமிழர்களாவது ஒரே இடத்தில் நின்று குரல் கொடுத்து இருந்தால் அங்கு போர் நிறுத்தப்பட்டு இருக்கும் அதை நாம் செய்யாதது பெரிய துரோகமாகும். இந்த துரோகத்தை நீக்க முதல் கட்டமாக முள்வேலிக்குள் அடைக்கபட்டுள்ள தமிழர்களை மீட்டு அவரவர் இடத்தில் குடியமர்த்தவும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீதான தடையையும் மத்திய அரசு நீக்க வேண்டும். பொதுக்கூட்ட மேடையின் முன்புறம் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை நினைவுபடுத்தும் வகையில் முட்கம்பிகளால் கட்டப்பட்டு இருந்தது. சிங்களப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழர்களை தாக்கும் காட்சியை கண்ட பலரின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது காண முடிந்தது. ஆவேசம் அடைந்த ஒரு கையில் இருந்த ஏதோ ஒரு பொருளைக்கொண்டு சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவரைப் போன்று வேடம் அணிந்தவர் மீது வீசி எறிந்ததால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது. |
திங்கள், 20 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக