ஞாயிறு, 19 ஜூலை, 2009

தமிழீழத் தீர்வில் மாறுபாடு இல்லை: வைகோ



கரூர், ஜூலை 18: "தமிழீழத் தீர்வில் மாறுபாடு இல்லை' என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.மாவட்ட இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கரூரில் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை வகித்து வைகோ பேசியது:"மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தின்படி உறுப்பினர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டு 50 நாள்களாக மாநிலம் முழுவதும் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவையில் சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்துடன் இது நிறைவு பெறுகிறது.செப்டம்பர் 15-ல் அண்ணா நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு திருச்சியில் நடைபெறும் மதிமுக மாநாடு திருப்பு முனையாக அமையும். இம்மாநாடு மதிமுகவிற்கு புதிய உற்சாகத்தை கொடுக்கும் என நம்புகிறோம்.சென்றது இனி மீளாது; புதியதாய்ப் பிறந்தோம் என எழுச்சி கொள்ள வேண்டும். மாநாட்டிற்குப் பின்னர் இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி கொண்ட பாசறைக் கூட்டம் நடத்தப்படும். அதில், அரசியல் வகுப்புகள், கொள்கை விளக்கம் அளிக்கப்படும்.ஈழத் தமிழர் பிரச்னையில் நம் நிலைப்பாடு தமிழக மக்கள் மனதில் அளவற்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. போரில் சிங்கள ராணுவம் மட்டும் மோதாமல் 20 நாடுகளின் ஆயுதங்களுடன் யுத்த களத்தில் புலிகளை வென்றார்கள். ஈழத்தில் முளைக்கும் புல், பூண்டுகூட சிங்கள ஆதிக்கத்தை ஏற்காது.தமிழீழம் ஒன்றே தீர்வு. அதில் எந்த மாறுபாடும் இல்லை. அந்தக் கோரிக்கையை அழிக்க இந்தியா உதவி செய்து வருகிறது' என்றார் வைகோ.
கருத்துக்கள்

முன்பு புதுதில்லியில் உள்ள தலைவர்களை எல்லாம் சந்தித்து ஈழச் சிக்கலின்பால் அவர்களின் கவனத்தைத் திருப்பிய வைகோ அவர்கள், அறிவிக்கப்படாத தமிழ் ஈழத்தின் தூதராகச் செயல்பட்டு உலகத் தலைவர்களைச் சந்தித்து தமிழ் ஈழ ஏற்பிற்கு ஆவன செய்ய வேண்டும். கொள்கை உறுதிப்பாடும் நாவன்மையும் ஆழ்ந்த அறிவும் உள்ள அவர் இம் முயற்சியில் இறங்கினால் உறுதியாக வெற்றி கிட்டும்! வெல்க அவர் முயற்சி! வாழ்க தமிழ் ஈழம்! மலர்க ஈழ-உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2009 3:41:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக