திங்கள், 20 ஜூலை, 2009

திருவள்ளுவர் சிலை திட்டமிட்டபடி திறக்கப்படும்:
பி.எஸ். எடியூரப்பா



பெங்களூர், ஜூலை 19: பெங்களூர் அல்சூரில் உள்ள திருவள்ளுவர் சிலை திட்டமிட்டபடி ஆகஸ்ட் 9-ம் தேதி திறக்கப்படும். சிலையைத் திறக்க நிபந்தனைகள் விதித்துள்ள கன்னட சங்கத்தினருடன் பேசி சுமூகத் தீர்வு காணப்படும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறினார்.
. . . . . . . . . . . . . . .
கர்நாடகத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவள்ளுவர் சிலையைத் திறக்க தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறப்படும். ஒருவேளை அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் சிலைத் திறப்பு ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படலாம். அதேசமயம் சென்னை அயனாவரத்தில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 13-ம் தேதி சர்வக்ஞர் சிலை திறக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார் முதல்வர் எடியூரப்பா.

கருத்துக்கள்

பேரம் என்று வந்தால் அது முறையாக இருக்க வேண்டும். தேர்தலைக் காரணம் காட்டித் திருவள்ளுவர் சிலை திறப்பு ஒத்திப் போகும் எனில் கன்னடர் சிலையும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டும். கன்னடர் சிலையை முதலில் திறந்து விட்டுப் பின்னர் வழக்கம்போல் அடாவடித்தனம் செய்து திருவள்ளுவர் சிலை திறப்பிற்குத் தடை போடலாம். ஆனால், இந்தியா ஒரே நாடு என்ற உணர்வு தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்குத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் குறிப்பிட்ட திருவள்ளுவர் சிலையைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்து 'குறுமனம் கொண்டவர்களால் பெங்களூரில் திறக்கப்டாத திருவள்ளுவர் சிலை இதுதான்! இந்தியாவின் முதல குடிமகனாக ஒரு தமிழர் இருந்த பொழுதும் திறக்கப்படாமல் போன திருவள்ளுவர் சிலை இதுதான்! ' என்னும் குறிப்புடன் திறந்து வைக்கப்பட வேண்டும். இனியும் இந்த மானக் கேட்டை நீட்டித்துக் கொண்டே போவதில் பொருள் இல்லை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2009 3:45:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக