வியாழன், 23 ஜூலை, 2009

"இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமைக்கு நடவடிக்கை'



புது தில்லி, ஜூலை 22: இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தில்லியில் புதன்கிழமை பேசுகையில் அவர் மேற்கண்டவாறு சொன்னார். இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விவாதித்தார் மேனன்.
கருத்துக்கள்

2/2) நாங்கள் உணர்வற்றவர்கள்; எங்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்களும் உணர்வற்றவர்களே! எனவே, 'இது எங்கள் வேலையல்ல' என்ற உங்களின் உண்மைக் கருத்தை வெளிப்படையாகச் சொல்லுங்கள் போதும்.

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 4:26:00 AM

1/2) சிங்கள உச்ச நீதிபதியே 10 பேர் நின்றால் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு நெருக்கடியான இடத்தில் 50 பேர் அடைத்து வைக்ப்பட்டுள்ள அவலநிலை கண்டு கணணீர் வடித்துள்ளார். தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதைத் தடுத்து நிறுத்த முடியாது எனச் சிங்கள அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலேயே பேசியுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் இன்னும் அங்குதான் உள்ளனர். வாக்குரிமை பறிக்கப்பட்ட தமிழர்கள் இன்னும் வாக்குரிமை வழங்கப்பெறாமல்தான் உள்ளனர். தமிழ் ஈழப் பகுதிகளில் படை முகாம்களை அமைப்பதுடன் அனைத்துப் பெயர்ப்பலகைகளையும் இந்திய அறிவுரைக்கிணங்கச் சிங்களத்தில் மட்டுமே வைத்து உள்ளனர். கண்ணி வெடிகளை அகற்ற 500 வீரர்கள் என்று சொல்லி 5000 இந்திய வீரர்கள் தமிழர் உரிமைகளை மேலும் நசுக்க அனுப்பப்பட்டுள்ளனர். பின் ஏன் இந்த நாடகம்? எதற்கு இந்த கோமாளி வேடம்? சம உரிமை என்று சொல்லி எங்கள் இறையாண்மையில் இந்தியா தலையிடக்கூடாது என்று சிங்களர்களால் அறிவிக்கச் செய்த பின்பு 'நாங்கள் எவ்வளவோ சொன்னோம்; சிங்கள அரசு கேட்கவில்லை' என்று சொல்வதற்காக ஏமாற்று வேலையா? .

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 4:25:00 AM

இந்த தேவடியாப்பயல் இன்னும் பதவியில் இருக்கிறானா?

By MKSamy
7/23/2009 3:38:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக