திங்கள், 20 ஜூலை, 2009

இடைத்தேர்தலை அதிமுக, மதிமுக புறக்கணிக்க
நாஞ்சில் சம்பத் கோரிக்கை



கோவில்பட்டி, ஜூலை 19: ஐந்து சட்டப் பேரவைகளுக்கான இடைத் தேர்தலை மதிமுகவும், அதிமுகவும் புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுக மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில்சம்பத் கேட்டுக் கொண்டார். கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் நாஞ்சில்சம்பத் பேசியதாவது: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்து இலங்கை அரசு முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால், பிரபாகரன் இறக்கவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வர் தில்லிக்கு செல்லவில்லை. காவிரி தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடகத்துக்கு செல்லவில்லை. ஆனால், அமைச்சர் பதவி கேட்க மட்டும் தில்லிக்கு செல்கிறார். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் வெற்றி பெற்றனர். வருகின்ற இடைத் தேர்தலிலும் அதிகாரம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் செயல்படுவர். எனவே, அதிமுகவும், மதிமுகவும் இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

2/2) (1/2 இன் தொடர்ச்சி) மேலும். பொதுவாகத் தமிழக மக்கள் நாடாளுமன்றத்திற்கு ஒரு வகையாகவும் சட்ட மன்றத்திற்கு ஒரு வகையாகவும் முடிவு எடுப்பது வழக்கம். எனவே, தமிழ் நலத்திற்காகவேனும் வெற்றி பெற்றக வேண்டும் என்னும் உறுதிப்பாட்டுடன் உழைத்து வெற்றி காண வேண்டும். தமிழ் ஈழ ஆதரவை மக்களிடையே கொண்டு செலலவும் தேர்தல் நல்ல வாய்ப்பு என்பதை உணர வேண்டும். அவ்வாறு இல்லாமல் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவிற்கு வருவதாயின் கட்சியைக் கலைத்து விட்டு எத் தேர்தலிலும் போட்டியிடாத இயக்கமாக மாற்றிவிடவேண்டும். அச்சமில்லை அச்சமில்லை எனப் பேசுபவர்கள் அஞ்சி அஞ்சிச் சாவது ஏனோ?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2009 3:30:00 AM

1/2) நாஞ்சில் சம்பத் கட்சியின் எண்ண ஓட்டத்தை முதலில் வெளிப்படுத்துவது போல் பேசக் கூடியவர். இதுதான் மதிமுகவின் கருத்து எனில் அது இழிவானதாகும். எத்தகைய தோல்வியையும் வெற்றியாக மாற்றும் உரத் துணிவும் தோல்வி கண்டு துவளாமையுமே அழகாகும். திமுக அரசு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்திச் செயற்படுத்தி வருகிறது. அதனால் பெருமபான்மையர் திமுக வின் பக்கம் இருப்பது இயற்கை. அதனை மீறி ஒரு குடும்ப வல்லாண்மையில் வெறுப்பு கொண்டுள்ள இரண்டாம் மட்டத் தலைவர்களும் அடிமட்டத் தொண்டர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். குடும்பத்தினர் பதவிகளுக்காகக் காங்.உடன் மன்றாடத் தெரிந்தவர்கள் ஈழத்தில் பேரவலங்கள் நடக்கும் என அறிந்தும் எதிர்க்காமல் இனப் படுகொலைக்குத் துணை நின்றமைக்கு வெறுப்புற்றவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆளுங் கட்சியினர் செல்வத்தை வாரி இறைப்பர் என அஞ்சினால் முன்னதாகவே மக்களை நாடி அவர்கள் வழியிலேயே குடும்பத்தினர் மீது அல்லது அவரவர்கள் வழி படும் கடவுள் மீது ஆணையிட்டுக் கையூட்டிற்காக வாக்களிக்க மாட்டோம் என்னும் உறுதி மொழியை மக்களிடம் இருந்து பெறவேண்டும். (தொடர்ச்சி 2/2 காண்க)

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2009 3:30:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக