வியாழன், 23 ஜூலை, 2009

எப்படி ஆனது தாயே உன்னால் மட்டும் இப்படி ஒரு கரும்புலிப் பிள்ளையை வளர்க்க… (கவிதை)

ltte_black_tigersஎப்படி இப்படி வளர்த்தீர்கள் இவரை… பலரைப் போல் இல்லையம்மா உன்பிள்ளை..

மலரைப்போல் மென்மையாக பேசிய உன் பிள்ளையா எரிமலையாக எதிரிமேல் பாய்ந்தாள்…
தாயே.. கருக்கல் கண்டு பயந்து சேலைத் தலைப்பைக் கையில் முடிந்து வந்தவனா மறவனாக உயர்ந்தான்.. அம்மா நீ முருகனை ஈன்ற உமையா… வீரமகளைப் பெற்ற தமிழா.. அன்னையே உன்னை வாழ்த்தி.. உறுகண் பகை துரத்தி உன் மறுகண்ணாயிருந்து மலர்ந்த மாவீரப் பிள்ளைகளை வணங்குகின்றேன்.

சொற்படி வைத்துச் சொல்ல முடியாத கவிதைகளை எப்படி வளர்த்தீர்கள்.. இப்படி ஒரு வீரக்கரும் புலிப்; பிள்ளையை.. அப்டி இப்படி என்று எனை வளர்த்த என் தாயிடம் என்ன குறை.. இப்படி இவரைப்போல். நானும் அவரணியில் சேர முடியாது போனது எப்படி.. இது தப்படி என்று வாசல்ப்படி தாண்ட விடாத தமிழினத்தில்.. எப்படி உன் மடிப்பிள்ளை மட்டும் கடல் அடியுள் சென்று வெடித்தாள்.. தாயே செப்படி அந்த வி;த்தையை தமிழினம் அறிய.. மெத்தையில் படுத்து நாசமாப் போகுது எமது வாழ்க்கை..

அம்மா உன் கருவில் இருந்த நின் மகவின் வளர்ச்சிக்கு தமிழ் உணர்வை எப்படிக் கொடுத்தாய்…

அரும்பாக துளிரும் பொழுதே அவர் இரும்பாக இருப்பதற்கு எதனைச் செய்தீர்கள்..

வீரக் கதைகள் சொன்னீரா.. தமிழ் கலந்து.. பாலூட்டி வளர்த்தீரா.. எதிர் கொள்ள அஞ்சும் பெரும் பட்டைத்தளத்தை அறுத்துக் குறுக்கும் திறன் அவர் பெற எதைக் கற்றார் உம்மிடத்தில்..

கிளித்தட்டுப் பாயினும் புலிஎன பாயச் சொன்னீர்களா. அயலவர்க்கு விரைந்து உதவியளித்திடப் பயிற்சி கொடுத்தீரா.. பசி கொண்ட நாய்கள் உடனிருந்து கடிக்கும்.. பழந்தமிழர் பெருமையை மங்கும் வகை செய்யும்.. அந் நரிகளை துரத்தி தலைவன் கொண்ட கொள்கை வழுவாது வாழ என்ன பயிற்சி தந்தீர்கள்..

ஓரிடத்தில் இரு என்று உச்சி வகுந்திடும்போது நெற்றியில் முத்தமிட்டு வீரத்திலகம் இது எனச் சொன்னீரா.. எப்படி உங்கள் பிள்ளைகள் மட்டும் இப்படி உயர்ந்தார்கள்…

தமிழ் பாருக்கு வேராக எப்படி நின்றனர்.. நேருக்கு நேராக நின்று தன் சாவுக்கு நாள் குறித்து.. உடலோடு குண்டணைத்து வெடிக்கும் முன் இறுதியாக உனைப் பார்க்க வந்ததுவாம் உன் பிள்ளை.. என் மன வேருக்குள் இத்துணிவு இல்லையே அம்மா..

எப்படி இருந்தார் அவர் எங்கேனும் ஒரு துளிக் கண்ணீர் விட்டழுதாரா.. சத்தியமாக சொல்கின்றேன் என்னால் முடியாது.. ஒப்பாரி வைத்து ஓவென்று கதறி ஊரையே கூட்டிடுவேன்.. உணர்ச்சி வசப்பட்ட பிண்டங்கள் நாங்கள்.. கண்டங்கள் கடந்துவந்து விடுதலை பேசும் முண்டங்கள் நாங்கள்..

தந்தையே… ஈசனுக்கு இணையானவரே.. அவரை தோளில் சுமக்கும் போது அவர் மனதில் தேசத்தை சுமக்கும் வலு எப்படிச் சேர்த்தீர்.. நடை பயிற்றும் போதுகூட வேங்கைபோல் நட எனச் சொன்னீரா..

குவளையிலே நெய் எடுத்து அவர் மேனி பூசயிலே சூரியனைக்காட்டி எரிமலைபோல் வெடிக்க கற்றுக்கொடுத்தீரா.. வேகுந் தளத்தில் பாதம் நோகும் யாகம் செய் எனச் சொன்னீரா..

புகழ் மிகுந்து தேசம் இந்நாள் அடிமையில் கிடக்குதடா மகனே.. தாயின் உவாதை நீக்க கட்டளை இட்டீரா.. அடிமை நீக்கிவாழ் இம்மண்ணில் நீ உயர்வாய் என்றீரா.. நாமார்க்கும் அஞ்சோம் காலனைக் காலால் உதைக்கச் சொன்னீரா.. அழிவைச் செய்யும் மதமொழி பேதப் பேயை வீழச் சுட புலியாகி புறப்பட செய்தீரா.. வீரவாக்குப் பெற்றீரா.. எப்படி இந்த வீரத்தமிழ் தோள்களை உயரச்செய்தீர்…

நான்கிலொரு பிள்ளை பிரிய தசரதன் மாய்ந்தான்.. நான்கு பிள்ளையையும் தமிழுக்கு தந்த பின்னும் இன்னுமொரு பிள்ளையிருந்தாலும் தலைவன் வழி செல் எனச் சொல்ல எப்படி உங்கள் மனம் இப்படி உறுதிhயக செய்தீர்கள்…

அக்காளின் கைபிடித்து அமைதியாக வந்தவனாம்.. அண்ணாவிடம் கொய்யா பழம் பிடுங்கி தாவென நின்றவாளம்.. தம்பியோடு தாவணியில் தமிழ்படிக்க நடந்தவளாம்.. அம்மாக்கு இயலாத போது அடுக்களையில் வேலை சுமந்த மூத்தவளாம்… தோளுக்கு மேல் வளர்ந்து தந்தைக்கு துணையாக நின்றவனாம்.. தரணியிலே பிறரைப்போல் தாமும் வாழும் ஆசை கொண்டவராம்.. இத்தனையும் மறந்துவிட்டா இவர் கரும்புலியாகி வெடித்தார்…

பாசப் பறவைகளின் கூட்டை உடைத்ததொரு வேடரினம்.. தமிழ்த் தேசத்தின் எல்லை தாண்டி எங்கள் வேரறுக்க வந்த பேரினவாதப் பேயினம்.. நன் புனல்ப் பொய்கையும்.. மாசு படித்திடச் செய்திடும்; குண்டுகள் வீசிக் காடுகளனி யழித்திடும் கொடும் நெருப்பில் வாடிய எம்மின வேதனை தாளாது வெடித்து அக்கினிக் குஞ்சுகளாய் எங்கள் உறவின் பலம் தலைவன் பாசறையில் பயின்றது புலியின் குணம்..

கனக்குது என்மனது உனக்கது புரியாது உலகே.. உன் இனத்துக்கென ஒரு இழிவு வரும் அன்று உன் மென் மனதுக்குள் ஒரு கோபம் வரும்… அந்நிலை உனக்கும் கரும் புலிவீரனாகும்; ஞானம் தரும்..

மணிவண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக