வியாழன், 23 ஜூலை, 2009

கருணா தமிழ் மக்களுக்கு

துரோகம் இழைத்துள்ளார்

– கருணாவின் மனைவி

zzதேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும் கருணா தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவரது மனைவி வித்தியாவதி தெரிவித்துள்ளார்.கருணாவின் மனைவியும் மூன்று குழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர், தற்போது ஸ்கொட்லாந்தில் வசித்து வருகின்றனர்.

ஊடக தர்மத்தின் அடிப்படையில் அவரது மனைவி வழங்கிய நான்கு மணி நேர செவ்வியையும் பிரசூரிக்க முடியாது என பிரபல ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் தலைவராக அவர் எவ்வாறு மாறினார் என்ற அடிப்படையை அடியோடு மறந்து விட்டார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குடும்ப பிரச்சினைகளைக் கூட கதைக்க முடியாத அளவிற்கு அவர் குழப்பமான சூழ்நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வித்தியாவதி தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போது மிகத் தெளிவான ஓர் குறிக்கோள் காணப்பட்டதாகவும், கருணா அதனை மறந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணா தனது சுயலாப நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவரே கருணாவை பிழையான பாதைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், தற்போது கருணா அவரது வாக்குகளை வேத வாக்காக எண்ணிச் செயற்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருணா திருந்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும், அவ்வாறு திருந்த மருத்தால் அவரது சகல ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்த பின்நிற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக