வியாழன், 23 ஜூலை, 2009

பிரசுரித்த திகதி : 23 Jul 2009

உலகெங்கிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்ததின் விளைவாக "உலகத் தமிழர் பேரவை" உதயமாகின்றது. தமிழர் மீது நடாத்தப்பட்ட பாரிய இனப்படுகொலைக்கு நீதி கேட்கும்முகமாகவும் , ஜேர்மனிய நாசி வதைமுகாங்களிற்கு ஒப்பான வதை முகாங்களில் வாடும் எமது உறவுகளை மீட்கவும் உலகில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் ஒலிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

சர்வதேசமயமான சுயாதீனமான, ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றினைப்பதன் மூலம் இப்பேரவையானது வலுப்பெறவுள்ளது.

இலங்கைதீவினில் தமிழர்களது பாரம்பரிய பூமியாகிய தமிழீழத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஜனநாயக ஆட்சியை மீட்டேடுப்பதற்கு, உலகத் தமிழர் பேரவயானது ஈழத்தில் வாழும் தமிழர்களோடும், இலங்கையில் வாழும் மற்றைய சமூகத்தினரோடும் இணைந்து செயற்படும்.
உலகத் தமிழர் பேரவையின் உடனடி இலக்குகளாக வதைமுகாங்களில் வாடும் எமது உறவுகள் தாயக பூமியில் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திருப்புவதற்கு பாடுபடுவதும், இனப்படுகொலையின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு உழைப்பதுவுமாகும்.
ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் இப்பேரவயில் அங்கம் வகித்து எமது இலட்சியத்தை நோக்கி முன் நகர்த்துவர்.

www.globaltamilforum.org


+44 (0) 7958 590 196
surensurendiran@globaltamilforum.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக