ஞாயிறு, 19 ஜூலை, 2009

"பொட்டு அம்மான் சயனைடு அருந்தி தற்கொலை'



கொழும்பு, ஜூலை 18: தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், இலங்கையில் அரசுக்கு எதிராக நடந்த சண்டையின்போது சயனைடு அருந்தி, கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.இத்தகவலை தீவிரவாதம் தொடர்பான துறையில் நிபுணத்துவம் பெற்ற இலங்கையைச் சேர்ந்த ரோஹன் குணரத்தன தெரிவித்தார்.இவர் சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் "அரசியல் வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கான சர்வதேச மைய'த்தின் தலைவராக உள்ளார்.இலங்கை நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற கடைசிக் கட்ட சண்டையின்போது பொட்டு அம்மான் ராணுவத்திடம் பிடிபடுவதைத் தவிர்க்க நந்திக்கடல் பகுதியில் சயனைடு அருந்தி கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதேபோன்று அவருடைய மனைவியும் சயனைடு அருந்தியிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களுடைய உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புலிகள் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இடம்பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் வழக்கை முடிப்பதற்கு அவர்களுடைய இறப்புச் சான்றிதழை வழங்குமாறு இந்திய அரசு கோரியுள்ளது.புலிகளால் அச்சுறுத்தல் வரலாம்: புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளார். விடுதலைப் புலிகளால் எந்த நேரத்திலும் இலங்கைக்கு மீண்டும் ஆபத்து வரலாம். அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளுடன் இலங்கை அரசு தொடர்புகொண்டு அவர்களை கட்டுப்படுத்தாத வரையில் இலங்கைக்கு அச்சுறுத்தல் இருப்பது நிச்சயம் என்றார்.
கருத்துக்கள்

உடன் கொல்லியான 'சயனைடை' உட்கொண்ட பின் உயிருக்காதே! பின் எப்படிக் கடலில் குதித்துத் தற்கொலை புரிய முடியும்? பொட்டு அம்மான் தானே நலமாக இருக்கும பொழுது தலைவரும் நலமாகத்தானே இருப்பார என மே 20 இல் பேசியதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை மறைப்பதற்காக இப்புரளியைக் கிளப்புகின்றனர். விடுதலைப் போராளிகள் வாழ்ந்தும் வழிகாட்டுவார்கள். விதையாய் வீழ்ந்தும் வழிகாட்டுவார்கள். உயிர்த்தெழுந்து தம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவார்கள். அடிமைப்படுத்துவோரின் ஆட்சி என்றேனும் வீழததான் செய்யும். இதுவே வரலாறு காட்டும் பாடம். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2009 4:00:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக