உயிர்தெழுவோம்’நிகழ்வில் கொக்கரிக்கும் சிங்களத்திற்கு நாம் ஓய்ந்துவிடவில்லை மாறாக வீறு கொண்டுள்ளோம் என எடுத்துரைத்த கனடியத் தமிழ் இளையோர்
- இவ் விடயம் 05. 07. 2009, (சனி), தமிழீழ நேரம் 21:33க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர்
கனடியத் தமிழ் மக்களால் இன்று சனிக்கிழமை மாலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரை ஒன்டாரியோ பாராளுமன்றத்தின் முன்றலில்உயிர்த்தெழுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் உணர்ச்சி பூர்வமாக கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவத்தின் கட்டுபாட்டில் இயங்கும் வதை முகாம்களில் வாழும் இரண்டு இலக்கத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை விடுவித்துமீண்டும் அவர்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியேற்ற வேண்டியும் போர்குற்றங்களில் ஈடுபட்ட ராஜபக்சே சகோதரர்களையும் இராணுவஅதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றளில் நிறுத்த வேண்டியும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச குமுகம் அங்கீகரிக்கவேண்டியும் உயிர்த்தெழுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வு மாலை ஐந்து மணியளவில் மங்கள விளக்கேற்றல், கனடியத் தேசிய கீதம், தமிழீழ தேசிய கீதம் மற்றும் அமைதி வணக்கநிகழ்வுகளுடன் ஆரம்பமானது.
அத்துடன் வானம் பாடிகளின் உணர்ச்சிப்பாடல்கள், காசியானந்தனின் கவிதை, ஈழத்தமிழரின் சுயநிர்ணய அரசிற்கு ஆதரவு வழங்கும் வேற்றின அமைப்பு பிரதிநிதிகளின் பேச்சுக்கள் என்பனவும் இடம்பெற்றது.
மேலும் கனடிய உயர்பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்களால் ஈழத்தமிழினத்தின் விடிவுக்கு கனடிய தமிழரின் பங்கும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மாணவர் குமுகத்தின் பலம் பற்றியும் தமிழீழ தேசியம் உருவாக கனடிய தமிழ் மாணவர்கள் உழைக்க வேண்டும் எனவும் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்கள்.
இறுதியாக தமிழீழ தேசிய சின்னங்களுக்கு உரிய முறையில் மதிப்பளித்தல், ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலை புலிகளின் தடையை நீக்குதல், வதை முகாம்களில் இருந்து ஈழத்தமிழர்களை விடிவித்தல், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய ஆட்சியை அங்கீகரிக்கும் வரை தமிழீழ தேசிய தலைவரின் வழிகாட்டலில் மாவீர்களின் கனவுகளை சுமந்தபடி போராடுதல், உட்பட பன்னிரண்டு உறுதி மொழிகள் எடுக்கப்பட்டன. இயக்குனர் சீமானின் பேச்சுடன் உயிர்தெழுவோம் நிகழ்வு முடிவுபெற்றது.
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள் நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம். நன்றி |
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
அடக்கி வாசித்தால் நல்லது
குலுக்கல் கூடாது
தலைவர் தாய்மை அடைந்து விட்டார் பதின் ஐந்து வருடங்களுன்க்கு மேலே
ஒரு
உண்மையான தாய் எப்படி சித்திரமா பத்திரமாய் தன குடும்பத்தை இனத்தவரை பார்பலோ அப்படி தான் அவரும்
அப்படியே நாங்களும் வர வேணும்