திங்கள், 21 டிசம்பர், 2009

தமிழ் பெண்களிடம் இலங்கை ராணுவம் பாலியல் கொடுமை: மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு



லண்டன், டிச.20: போரினால் முகாம்களில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழ் பெண்கள் பயங்கரமான கொடுமையை அனுபவித்தனர் என்று மனித உரிமை அமைப்பு ஒன்றின் பிரிட்டன் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிலும், முகாம்களில் இளம்பெண்களை ராணுவ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமைப் படுத்தியதே வேதனையான விஷயம் என்றும் அவர் கூறினார். முகாம்களில் இருப்பவர்களுக்கு போதுமான உணவு அளிக்கப்படுவதில்லை. இதனால் பசியால் துடிக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ராணுவ அதிகாரிகள், தமிழ்ப் பெண்களுக்கு உணவு தருவதாகவும், பணம் தருவதாகவும் கூறி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்பதே பரிதாபம் என்றார் அந்த மருத்துவர். இலங்கையில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்திருந்த முகாம் ஒன்றை பார்வையிட்டேன். அப்போது என் கண் முன் அரங்கேறிய கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த முகாமில் ஈழத்தமிழர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்பட்டனர். முகாம்களில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முகாமின் முள்வேலிக்கு அருகில் நெருங்கவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது. முகாம்களில் உள்ளவர்களை பார்வையாளர்கள் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தே பார்க்க முடிந்தது. அதுவும் சிறிது நேரமே பார்க்க முடிந்தது. உடனையே ராணுவ அதிகாரிகள் வந்து ஈழத்தமிழர்களை முகாமுக்குள் செல்லுமாறு எச்சரித்தார்கள். அப்போது பெண்களின் தேகத்தை தொட்டு அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். அதை பார்க்கவே கண்கூசியது. வேதனையாக இருந்தது. ராணுவ அதிகாரிகள் அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாய் தமிழ்ப் பெண்கள் நடந்து சென்றனர். அப்படி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு எதுவும் நிகழலாம். அதை உணர்ந்துதான் அவர்கள் கொடுமையை சகித்துக்கொண்டு, தங்களது நிலைமையை நினைத்து மெüனமாக சென்றனர். மற்றொரு முகாம் ஒன்றில் போருக்குப் பயந்து தஞ்சம் அடைந்த வாணி குமார் (25) என்ற பெண்ணை இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 மாதங்கள் அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளனர். சில நேரங்களில் அந்த பெண்ணை நீண்ட நேரம் வெயிலிலும் நிறுத்தி வைத்து கொடுமை செய்துள்ளனர். இப்படி இலங்கை முகாம்களில் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான கொடுமையை சொல்லி மாளாது என்றார் அந்த மருத்துவர்.
கருத்துக்கள்

யார் எப்படிப் போனால் என்ன? தமிழினம் சீரழிந்தால் என்ன? நாங்கள் விருதுகளை வாங்கிக் கொண்டு விழாக்களை நடத்திக் கொண்டிருப்போம். கொலைகாரர்களுடன் கூடிக் குலாவிப் பதவிகளை வாங்குவோம். தமிழுணர்வை நாங்கள் உயர படிக்கட்டுகளாகப் பயன்படுத்திக் கொள்வோமே தவிர உண்மையான தமிழ் உணர்வு நிலைக்க யாதும் செய்ய மாட்டோம்.உட்கட்சியிலும் வெளிக்கட்சிகளிலும் உள்ள எதிர்ப்புகளைச் சமாளிக்கவே எங்களுக்கு நேரமில்லாத பொழுது இதிலெல்லாம் எப்படி கவனம் செலுத்த முடியும் என்று பரிவுடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இவையே தமிழக அரசியல்வாதிகளின் உட்குரல். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 6:01:00 AM

யாழ் குடாவில் படையினர் கட்டும் பௌத்த மதவழிபாட்டுத் தலம் திகதி: 20.12.2009 // தமிழீழம் யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படையினர் அத்துமீறிய பௌத்த மதவழிபாட்டுத் தலத்தினை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தின் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்றாக விளங்கிய திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலை சந்தியில் சிறீலங்காப் படையினர் காவலரண் அமைத்து நிலைகொண்டனர். இதில் பாரிய சோதனைக் கண்காணிப்பு அரண்கள் அமைத்துள்ளார்கள். இதன்போது அரசமரம் நட்டு பௌத்த மத வழிபாட்டினை கடந்த காலங்களில் மேற்கொண்டார்கள். இப்பகுதி மக்கள் தற்போது இயல்பு வாழ்வினை எதிர்கொண்டுள்ள நிலையில் இப்பகுதியில் பாரிய புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளார்கள். மக்களிடமோ அரசாங்க அதிகாரிகளிடமோ அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ மத மக்கள் செறிந்து வாழும் இப்பிரேசத்தில் சிறீலங்காப் படையினர் அத்துமீறி பௌத்த மதவழிபாட்டு தலம் கட்டுவதால் இப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.

By Thamil
12/21/2009 1:59:00 AM

திருமலை மாவட்டத்தில் சில வங்கிகளில் கடமைபுரியும் தமிழ் பெண்கள் மீது வலுக்கட்டாயமான முறையில் சிங்கள கலாசார பாரம்பரியங்கள் திணிக்கப்படுவதாகத் தெவிக்கப்படுகிறது.இந்த வங்கிகளில் கடமை புரியும் தமிழ்ப் பெண்கள் தமது சமூகம் சார்ந்த உடைகளை அணியக்கூடாதெனவும் சிங்கள பாரம்பரிய உடைகளே அணிய வேண்டுமெனவும் அவர்களது நிர்வாகங்கள் நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.தமிழ் வாடிக்கையாளர் வங்கிகளுக்குள் நுழையும் போது கூட "வணக்கம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஆயுபோவன்'' சொல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாகியுள்ளனர். இதேவேளை கந்தளாய் குளத்தைக் கட்டியவர் குளக்கோட்டன் என்பதனை மறைக்கும் வகையில் அந்தக் குளத்தைச் சிங்களவர் ஒருவரே கட்டியதாக வலிந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களுடன் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் நம்பகமான செய்திகள் தெவிக்கின்றன.

By Thamil
12/21/2009 1:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக