சனி, 26 டிசம்பர், 2009

மகால படைப்புகள் பாடத்திட்டத்தில் கூடாது: தினமணி ஆசிரியர்



உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​ திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​ நூலாசிரியர் தமிழ்மகன்.​​
சென்னை, ​​ டிச.25: "சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறக் கூடாது' என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது:""எல்லாக் காலங்களிலும் படைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.​ எல்லா எழுத்தாளனுக்குமே தான் படைத்த படைப்பெல்லாம் இலக்கியம்தான்;​ சிறந்ததுதான்.​ இதில் எதை நாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வது?​ இலக்கியம் என்கிற அங்கீகாரம் பெற என்னதான் அளவுகோல்?காலம் என்கிற பரிசோதனைச் சாலையில் அங்கீகாரம் பெறாத எந்த எழுத்தும் இலக்கியமாகாது.​ குறைந்தது ஒரு தலைமுறையைத் தாண்டி அந்தப் படைப்பு நின்றால் மட்டுமே அது இலக்கியம்.​ எழுதப்படும்,​​ வெளியிடப்படும் படைப்புகளில் 90% படைப்புகள் காலத்தால் புறந்தள்ளப்பட்டு விடுகின்றன என்பதுதான் யதார்த்த உண்மை.​ ​அதேபோல,​​ சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி,​​ கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது.​ குறைந்தது 50 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகள் மட்டுமே பாடத் திட்டத்தின் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.​ சமகாலப் படைப்புகளை ஏற்றுக் கொள்ளும்போது,​​ ஆட்சிக்கும்,​​ பாடத்திட்டக் குழுவுக்கும் வேண்டியவர்களின் தரமற்ற இலக்கியப் படைப்புகள்கூடப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாகத் தரப்பட்டுவிடும் ஆபத்து உண்டு.​ இதன் தொடர் விளைவாகத் தரமற்ற நாளைய தலைமுறை உருவாகிவிடும் என்பது மட்டுமல்ல,​​ இலக்கியத்தின் தரமும் தாழ்ந்துவிடும்.நமது எழுத்தும்,​​ பேச்சும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்;​ மாற்றத்திற்கு வழிகோல வேண்டும்;​ அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும்'' என்றார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.
கருத்துக்கள்

சமகாலப் படைப்புகள் என்ற போர்வையில் தரமற்ற படைப்புகள் பாடமாக ஆக்கப் படுகின்றன என்பது முற்றிலும் உண்மை. ஆனால் பொதுவாக 50 ஆண்டுகள் என்பது நீண்ட இடைவெளி. கதை. கவிதை இலக்கியங்களுக்கு மட்டும் கால வரையறை வைத்தால போதுமானது. மேலும், இக்காலத் திறனாய்வுக் கருத்துகளைப் புறந்தள்ளக்கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக