ஹைதராபாத், டிச. 25: காலவரையற்ற பந்த் உள்பட போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து தெலங்கானா கூட்டு போராட்டக் குழு ஆலோசனை நடத்தியது.கூட்டு போராட்டக் குழு கூட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு மத்திய அரசுககு காலக்கெடு விதிப்பது உள்பட தனி தெலங்கானா தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சனிக்கிழமை பந்த் போராட்டம் நடத்துவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக அமைதியான முறையில் ஊர்வலம், ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் இரண்டாவது நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வியாழக்கிழமை உஸ்மானியா பல்கலைக்கழக வளாகம் அருகே தெலுங்கு தேச எம்.எல்.ஏ. தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2-வது நாள் கூட்டத்தில் அக் கட்சியினர் பங்கேற்கவிலலை.ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு தெலுங்கு தேச கட்சியினரும் கூட்டு போராட்டக் குழுவில் இணைந்து கொள்ள வேண்டும் என்று தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் என். நரசிம்ம ரெட்டி கேட்டுக்கொண்டார்.
கருத்துக்கள்
நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் இந்திய அடிமைகளாகத்தான் வாழப் போகின்றீர்கள்! அப்புறம் ஏன் இந்த வன்முறைப் போராட்டம்? உங்களுக்கு வேண்டாப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைத்து உங்கள் பகுதிக்குத் தெலுங்கானா அல்லது தெலங்கானா எனப் பெயர் சூட்டிக் கொள்ளுங்களேன்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
12/26/2009 3:07:00 AM