சனி, 26 டிசம்பர், 2009

சுவாமி விவேகானந்தர் பிறந்ததினத்தன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை



சென்னை, ​​ டிச.​ 25: ​ சுவாமி விவேகானந்தர் பிறந்ததினமான ஜனவரி 12}ம் தேதி மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.​ இந்தியா ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த பண்டைய நாடு என உலகிற்கு உணர்த்தியவர்.இன்றைக்கு இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆன்மிகம் அறிந்த இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரை தங்களது ஆதர்ச நாயகனாக பார்க்கிறார்கள்.​ இதைக் கண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக அறிவித்தார்.ஆனால் இன்று தமிழகத்தில் மது அருந்துவோரில் 95 சதவீதம் இளைஞர்களாக உள்ளனர்.​ எனவே சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று மதுக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.சி.​ செந்தில்​ குமார் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இந்தக் கோரிகையை இந்தியா முவழுவதுமே வைப்பதுதான் முறை.எனினும் தமிழ நாட்டில்தமிழர் திருநாளை முன்னிட்டு அந்த வாரம் முழுவதுமே மதுக்கடைகளுக்கு விடுமுறை விடலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக