வியாழன், 24 டிசம்பர், 2009

ஊழல் பணத்தால் திமுக வெற்றி: விஜயகாந்த்



சென்னை, ​​ டிச.23: ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:எது நடக்கக் கூடாதோ அது நடந்துள்ளது.​ திருச்செந்தூர்,​​ வந்தவாசி ​(தனி)​ இடைத்தேர்தல் முடிவுகள் ஜனநாயக முறைக்கு எதிரானது.​ எந்த ஊழலை ஒழிக்க பாடுபடுகிறோமோ அந்த ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது.​ தாற்காலிகமான இந்த வெற்றி திமுகவினருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.​ ஆனால் எதிர்காலத்தில் இது அவர்களுக்கே ஆபத்தாகிவிடும்.​ "வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பாடம் நாளை திமுகவுக்கு கிடைக்கும்.​ வெற்றி,​​ தோல்வி சகஜம் என்று வேதாந்தம் பேசி பயனில்லை.​ இந்தத் தோல்வி ஏழைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகும்.​ இதனால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும்.​ எனவே தமிழக மக்கள் விழிப்புடன் செயல்பட்டு மாற்றம் காண வேண்டியது அவசியமாகும்.​ இந்த தர்ம யுத்தத்தில் எதிர்பாராமல் தேமுதிக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.​ கொட்டிய பண மழையிலும் நேர்மையாக நமக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.​ தமிழகத்தில் நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்பதை ஏற்று வாக்களித்த இந்த நல்லோர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆட்டிப்படைக்கும் அதிகார சூழ்நிலையிலும் தேர்தல் பணியாற்றிய தேமுதிக நிர்வாகிகளுக்கு என் இதயத்தில் என்றும் நீங்காத இடம் உண்டு.வாக்காளர்களுக்கு தாராளமாக லஞ்சம் கொடுத்ததை பத்திரிகைகளும்,​​ தேர்தல் பார்வையாளர்களும் நன்கறிவார்கள்.​ நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் இந்த இடைத் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும்.​ எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.​ அப்போதுதான் நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

குறுக்கு வழியில் தேர்தலை அணுகுவதில் மட்டுமல்லாமல், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் கலைஞர் முன்னணியில் உள்ளார் என்பதை உணர வேண்டும். எனவே, இவ்வாறெல்லாம் அறிக்கை விட்டுப் பயனில்லை என்பதை உணர்ந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இனிமேலாவது செயல்பட வேண்டும். தமிழ் ஈழம் அமைய பரப்புரை மேற்கொண்டு வெற்றி காண வேண்டும். தமிழ் ந்லப் பணிகளிலும் மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபட்டால் வெற்றி மாலை தானாகத் தேடி வரும்.

அன்புடன் இலக்குவனார் திருள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 2:56:00 AM

captain statements also become like JJ. He dosnt know about anything politics.. Hope he ll completely wash out form 2011 elections..

By raja
12/24/2009 1:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக