வியாழன், 24 டிசம்பர், 2009

தர்மபுரி மாவட்டத்தில் இலவச வேஷ்டி,​​ சேலைக்குத் தடை? தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதுகிறார் நரேஷ் குப்தா



சென்னை, ​​ டிச.23:​ பென்னாகரம் இடைத் தேர்தலை ஒட்டி,​​ அந்தத் தொகுதி இடம்பெற்றுள்ள தர்மபுரி மாவட்டத்தில் இலவச வேஷ்டி,​​ சேலை விநியோகத்துக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.இதுதொடர்பாக,​​ தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வியாழக்கிழமை கடிதம் எழுத உள்ளார்.பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பெரியண்ணன்.​ திமுகவைச் சேர்ந்த அவர் அண்மையில் காலமானார்.​ இதைத் தொடர்ந்து,​​ அந்தத் தொகுதிக்கு ஜனவரி 20}ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை... தேர்தல் பிரசாரம் நடைபெறும் நாள்களில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை,​​ தமிழ்ப் புத்தாண்டு போன்றவை வருகின்றன.​ இதனால்,​​ தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என பாமக உள்ளிட்ட சில கட்சிகள் கூறி வருகின்றன.இந்த நிலையில்,​​ பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசின் சார்பில் இலவச வேஷ்டி,​​ சேலை வழங்கப்படுவது வழக்கம்.​ மேலும்,​​ பொங்கல் வைப்பதற்கு பொருள்களும் கொடுக்கப்படும்.தேர்தல்களில் வாக்களிப்பதற்கு பணம் கொடுக்கும் பிரச்னை கடுமையாக உருவெடுத்து வருகிறது.​ பண்டிகை காலங்கள் என்றால் பணம் கொடுப்பது அரசியல் கட்சிகளுக்கு எளிதாகி விடும் என்ற கருத்து நிலவுகிறது.இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் கேட்ட போது,​​ ""இலவச வேஷ்டி,​​ சேலை கொடுப்பது மட்டுமல்ல;​ பொங்கல் வைப்பதற்கு பொருள்களும் அளிக்கப்படும்.​ பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் டிசம்பர் 26}ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.​ அந்த மாவட்டத்தில் இலவச வேஷ்டி,​​ சேலை உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வியாழக்கிழமை கடிதம் எழுத உள்ளேன்.​ ஆணையத்தின் பதிலைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் நரேஷ் குப்தா.
கருத்துக்கள்

அரசு இலவசமாக அளிப்பதைத்தானே தடை செய்ய முடியும். கட்சிகளின் அன்பளிப்பைத் தடைசெய்ய முடியாதே! பிறகு ஏன் இந்த வெற்றறிக்கை. இடைத் தேர்தலின் பயனைத் தருமபுரி மாவட்ட மக்களும் அடைவதை யாராலும் தடுக்க முடியாது. ஆதலின் ஒதுங்கி இருந்துகட்சிகளின் இலவசங்களை ஒழுங்கு படுத்திக் கொடுத்தால் நல்லது. தேர்தல் ஆணையமாவது இலவசங்களைத தடை செய்வதாவது! வெங்காயம்! நீங்கள் தடுக்கில் பாய்ந்தால் இடுக்கில் பதுங்குபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. எனவே, தேர்தல் ஆணையத்தின் செல்லாக் காசு போன்ற நடவடிக்கைகளைக் கைவிட்டு அரசாங்கச் செலவிலாவது சிக்கனம் ஏற்படுத்த வழி பாருங்கள்.

- இப்படிக்கு ஆளுங்கட்சி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 3:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக