நம்மோடு நட்புடன் பழகி, நாம் ஆதரித்தால் தான் உலக நாடுகளில் ஒரு நாடாக மலரும் நிலை உள்ளது. ஆனால் நம்முடன் நட்புடன் பழகிய ஈழத் தமிழ் நாட்டைச் சிதைத்தது ஏன்? நாம் ஆதரித்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்ற உண்மையை உரைத்ததற்குப் பாராட்டுகள். ஆனால் நட்பு நாடி வந்தவர்களை விரட்டி யடித்து விட்டு வஞ்சகர்களுடன் கைகோத்துக் கொத்துக் கொத்தாகவும் எரி குண்டுகள் மூலமும் வஞ்சகச் செயல்கள் மூலமும், வெண்கொடி ஏந்தி வரச் செய்தும் அழித்தொழிததது ஏன்? மனச் சான்று எட்டிப பார்ப்பதால் காங்கிரசுடன் உறவு முறியும் பொழுது உண்மை வெளிவரும். ஆனால் உயிரிழந்த நம்மவர்கள் மீண்டு வருவார்களா? உடலுறுப்புகளை இழந்தோரும் உடைமைகளை இழந்தோரும மீள் நிலைக்குத் திரும்புவார்களா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/23/2009 3:21:00 AM
பெட்டிகளில் பயணம் செய்யப் பதிவு செய்தோர் மிகுதியாக இருக்கும் பொழுது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதில்லையா? அது போல் சூழலுக்கேற்பத்தான் முடிவெடுக்க வேண்டும். உவமைகள் செய்தியைப் புரிந்து கொள்ள உதவலாமே தவிர உண்மையாகிவிடாது. தமிழ் நாட்டைப் பிரிக்கலாமா அல்லது வேண்டாவா எனக் கூறும் உரிமை நமக்கு உண்டு. பிற மாநிலங்களைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலத்தவர்தான் முடிவெடுக்க வேண்டும். தலையிடும் உரிமை பிற மாநிலத்தவருக்குக் கிடையாது. 1947க்குப் பின்னர்ப் புதிய மாநிலங்கள் பல உருவாகியிருக்கும் பொழுது மேலும் மாநிலங்கள் பிரிக்கப்படுவது கொலைபாதகச் செயலன்று. அதேநேரம் பிரித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமுமன்று. எனவே, உரிய மாநிலததவர் அமைதியான வழீயில் அணுகி உரிய தீர்வுகளை எட்ட வேண்டும். பிற மாநிலத்தவர் தலையிடுவதற்கான உரிமையைத் தரக் கூடாது. மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது என்றால்தான் இந்தியன் என்ற தேசப்பற்று முத்திரை கிடைக்கும் என எண்ணுவது அறியாமை அல்லவா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/23/2009 3:12:00 AM