வியாழன், 24 டிசம்பர், 2009

கருணாநிதியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி:​ தங்கபாலு



சென்னை, ​​ டிச.23: இடைத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி முதல்வர் கருணாநிதியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ.​ தங்கபாலு கூறியுள்ளார்.இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:திருச்செந்தூர், ​​ வந்தவாசி ​(தனி)​ தொகுதிகளில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கும் வகிக்கும் திமுக வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர்.முதல்வர் கருணாநிதியின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை இந்த வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.​ தேர்தல் களத்தில் எதிர்க்கட்சியினர் உண்மைக்கு மாறாக மக்களை திசைதிருப்பும் வகையில் பிரசாரம் செய்தனர்.​ மத்திய,​ மாநில அரசுகளின் சாதனைகளுக்காக திமுகவை வெற்றியடையச் செய்துள்ளனர்.​ திராவிடர் கழகத் தலைவர் கி.​ வீரமணி:​​ திருச்செந்தூர்,​​ வந்தவாசி ​(தனி)​ தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணன்,​​ கமலக்கண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.​ இது அவ்விருவரின் தனிப்பட்ட வெற்றி அல்ல.​ முதல்வர் கருணாநிதியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமே இந்த வெùற்றி.இதற்கு முன்பு 5 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுகவை இந்தத் தேர்தலில் மக்கள் புறக்கணித்துள்ளனர்.
கருத்துக்கள்

கலைஞர்தான் நல்லாட்சி நடத்துகிறாரே! பிறகு ஏன், தமிழ் நாட்டு நிலங்களைப் பிற மாநில்ங்களுக்குத் தாரை வார்த்த தமிழ் அழிப்பு வேலைகளில் ஈடுபடும் காங்கிரசு ஆட்சி மலரப் பாடுபடு வதாக அவ்வப்போது அறிக்கை விட வேண்டும். மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு ஊருக்குப் போய் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே. தான் கூறும் நல்லாட்சி தொடரவாவது தங்கபாலு - தனக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் - தமிழ்நாட்டுக் காங்கிரசுக்கட்சியைக் கலைதது நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முன் வரவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக