சென்னை, டிச.23: இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவானதற்கான காரணத்தை முதல்வர் கருணாநிதி விளக்கி உள்ளார்.திருச்செந்தூர், வந்தவாசி (தனி) தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான கருணாநிதி புதன்கிழமை காலை வந்தார்.தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றியை பெற்று இருக்கின்றன. மகத்தான வெற்றியை வழங்கிய மக்களுக்கு திமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இடைத் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்கு அளித்திருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்?திமுக அரசின் சாதனைகள், மக்கள் தொடர்பு, மக்கள் பிரச்னைகளில் காட்டுகிற அக்கறை ஆகிய காரணங்களுக்காக மக்கள் தாங்களாகவே முன்வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு வருவார்களா?வந்தால் உங்களுக்கே தெரியும்.உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குப் பதிவை கட்டாயமாக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்களே? அதைப் பற்றி உங்கள் கருத்து.அந்தக் கருத்து பற்றி இரு வேறு அபிப்பிராயங்கள் தமிழகத்தில் உள்ள தலைவர்களால் சொல்லப்பட்டுள்ளன. பழுத்து வந்த பிறகு அந்தக் கருத்து பற்றி நான் என் கருத்தைச் சொல்கிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
கருத்துக்கள்
'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை.''
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 3:08:00 AM
12/24/2009 3:08:00 AM
Really Mr Karunanithi?
By S
12/24/2009 2:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்12/24/2009 2:58:00 AM