வெள்ளி, 25 டிசம்பர், 2009

மீண்டும் அ.தி.மு.க.​ ஆட்சி: ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்புசென்னை, ​​ டிச.24: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.​ ஆட்சியை மலரச் செய்வோம் என எம்.ஜி.ஆர்.​ நினைவிடத்தில் அக் கட்சியினர் வியாழக்கிழமை உறுதிமொழி ​எடுத்துக் கொண்டனர்.​ தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 22}வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.​ இதனையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.​ நினைவிடத்தில் அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலத்தினார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்.​ நினைவு தின உறுதிமொழியை ஏற்றனர்.​ அரசியலில் நீதி,​​ நேர்மை,​​ நியாயம்,​​ ஒழுக்கம்,​​ பண்பாடு நிலைக்க பாடுபடுவோம்;​ மக்கள் விரோத தி.மு.க.​ அரசை அகற்றுவோம்;​ தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.​ ஆட்சியை மலரச் செய்வோம்;​ இதற்காக மக்கள் ஆதரவைத் திரட்ட அ.தி.மு.க.வினர் அனைவரும் சூளுரை ஏற்போம் என அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.​ பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசியதாவது:​ இப்போது இடைத்தேர்தலில் தி.மு.க.​ பெற்ற வெற்றி செயற்கையானது.​ அவர்கள் பெற்றது வெற்றியும் அல்ல;​ நாங்கள் பெற்றது தோல்வியும் அல்ல.​ இந்த நிலை விரைவில் மாறும்.​ தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.​ ஆட்சி மலரும்.​ இதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்றார் ஜெயலலிதா.​ இந்நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க.​ தலைமைக் கழக நிர்வாகிகள் மதுசூதனன்,​​ ஓ.​ பன்னீர்செல்வம்,​​ கே.ஏ.​ செங்கோட்டையன்,​​ டி.​ ஜெயக்குமார்,​​ பொள்ளாச்சி ஜெயராமன்,​​ சுலோச்சனா சம்பத்,​​ மைத்ரேயன் எம்.பி.​ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வைகோ,​​ திருநாவுக்கரசர்:​ மேலும் ம.தி.மு.க.​ பொதுச் செயலாளர் வைகோ,​​ எம்.ஜி.ஆர்.​ கழகத் தலைவர் ஆர்.எம்.​ வீரப்பன்,​​ முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்,​​ நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.​ சண்முகம் உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆர்.​ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துக்கள்

எப்படியும் பெண்ணாடம் தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறப் போகிறது. எனவே, இத் தேர்தலில் மதிமுக விற்கு விட்டுக் கொடுத்தால் அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகம் ஏற்படும். ஒரு வேளை ஒரு பகுதி வாக்காளர மனங்களிலாவது மாற்றம் வரலாம். மற்றபடி அரசியலில் ஒழுக்கம்,நீதி, நேர்மை, நியாயம்,பண்பாடு என்பனவெல்லாம் வேறு பொருளில் அல்லவா உள்ளன. அதைக் குறிததுப் பேச எந்த அரசியல் கட்சிக்கும் உரிமை இல்லையே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 2:25:00 AM

Srimathi Jayalalitha knows how to play the game. But does not know how to get the love of the people. What MGR did was real love tot he poor. Care for common people. ADMK should consider change their system. It is difficult to get vote in the name of MGR. Please come out with solid proposals to the common people what you can do and how you could behave if elected again. Doing politics is good but serving people is difficult. Your brain power could not help here. Only the heart should speak to the common people. ADMK is till majority opposition party after Vijayakant is down.

By Meena
12/25/2009 12:44:00 AM

HAHA, WHAT A JOKE !!

By GUSWANTH
12/25/2009 12:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக