சனி, 26 டிசம்பர், 2009

13 ஆந்திர அமைச்சர்கள் ராஜிநாமா



தெலங்கானா விஷயத்தில் மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை ராஜிநாமா கடிதங்களை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி பின்னர் ஹைதராபாதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் 13 அமைச்சர்கள்.புதுதில்லி, ​​ டிச.​ 25: தெலங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி 2-வது நாளாக வெள்ளிக்கிழமை ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் கலவரம் நடைபெற்றது.​ மாநில நீர்ப்பாசன அமைச்சர் பி.​ லட்சுமணய்யாவின் வீட்டை கலவரக்காரர்கள் தாக்கினர்.​ தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் அரசு அலவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.​ வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.​ இதனால் கடும் பதற்றம் நிலவுகிறது.​ இதற்கிடையே தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திர அமைச்சரவையில் உள்ள 13 அமைச்சர்கள் ராஜிமாநா செய்துள்ளனர்.​ அவர்கள் தங்களது ராஜிநாமா கடிதங்களை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளனர்.மாநில முதல்வர் ரோசய்யாவைச் சந்தித்து தங்களது ராஜிநாமா முடிவை அவர்கள் தெரிவித்தனர்.​ தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.தெலங்கானா தனி மாநில விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதால் ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பகுதி முழுவதும் புதன்கிழமை வன்முறை வெடித்தது.​ மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ​ 48 மணி நேர பந்த் போராட்டத்துக்கு தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்பட அனைத்துக் கட்சிகளும் புதன்கிழமை இரவு அழைப்பு விடுத்திருந்தன.​ இதனால் தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த பந்த் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக தெலங்கானா ராஷ்ட்ர சமிதி அறிவித்திருந்தது.​ இருப்பினும் தெலங்கானா பகுதியில் பல இடங்களில் வெள்ளிக்கிழமை வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.பல இடங்களில் போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்று தாக்குதல் நடத்தினர்.​ சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி இருந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது.​ மெகபூப்நகரில் சிவில் சப்ளை நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கி தீ வைத்து கொளுத்தப்பட்டது.​ வன்முறையாளர்கள் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.அமைச்சர் வீடு முற்றுகை:​ வாரங்கல் நகரில் பெரிய நீர்ப்பாசன திட்ட அமைச்சர் பி.​ லட்சுமணய்யாவின் வீட்டை கலவரக்காரர்கள் முற்றுகையிட்டு தாக்கினர்.​ கலவரக்காரர்களை போலீஸôர் அப்புறப்படுத்தினர்.​ மேலும் மாணவர்கள் பெரும் திரளானோர் ஊர்வலமாகச் சென்று ககாதியா பல்கலைக்கழகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுபோல் அடிலாபாத்,​​ கரிம்நகர்,​​ மேடக் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.​ ராகவப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் அறையை தீவைத்து கொளுத்தினர்.இந்திரா காந்தி சிலை:​ புதுகல் கிராமத்தில் உள்ள இந்திரா காந்தி சிலை வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்டது.​ ஒன்றுபட்ட ஆந்திரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.சித்திப்பேட்டையில் தனியார் செல்போன் கோபுரத்துக்கு தீ வைக்கப்பட்டது.​ இந்த கலவரங்கள் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ தெலங்கானா போராட்டக் குழுவினர் பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டனர்.பின்வாங்கவில்லை:​ தெலங்கானா பிரச்னையில் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த முடிவிலிருந்து பின்வாங்கவில்லை என்று மத்திய சட்ட அமைச்சரும் ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினார்.​ ஆந்திர மாநில அரசியல் கட்சிகள்தான் தங்களது நிலையிலிருந்து பின்வாங்கிவிட்டன.​ கடந்த 7-ம் தேதி முதல்வர் ரோசய்யா கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தெலங்கானா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள் இப்போது ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றார் அவர்.​ மத்திய அரசு ஜனநாயக முறையில் செயல்படுவதால் அனைத்து தரப்பினரின் கருத்தையும் ஏற்றும் ஆலோசித்தும் அதன் அடிப்படையில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயன்று வருகிறது என்றார் அவர்.மொய்லியின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த தெலங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் -​ எம்.எல்.ஏ.க்கள்,​​ குறிப்பிட்ட காலத்துக்குள் தெலங்கானா பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.சந்திரபாபு நாயுடு கண்டனம்:​ தெலுங்கு தேச எம்.எல்.ஏ.​ ​ நகம் ஜனார்த்தன ரெட்டியை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியினர் தாக்கியதற்கு தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.​ அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் வன்முறையில் இறங்கி உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.​ தெலுங்கு தேச கட்சியினரின் சொத்துக்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.​ ​மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சி பேதமின்றி தெலங்கானா பகுதியைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள்,​​ 82 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.​ மாநில அமைச்சர் வெங்கட ரெட்டியும் ஏற்கெனவே ராஜிநாமா செய்துள்ளார்.
கருத்துக்கள்

நம் மக்களின் துன்பங்களைத் துடைத்து அவர்கள் உரிமையுடன் வாழ நாம் உரிமையுடன் குரல் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். உரிமையுள்ள மக்களே பிறர் உரிமைக்காக உழைக்க முடியும் என்பதையும் உணர வேண்டும். நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் தமிழ் மட்டுமே பேசிய இக்கண்டம் முழுவதும் தமிழ் இனப் பகைவர்களால் நிறைந்து தமிழ் பேசும் பகுதி மிகவும் குறைந்துள்ளதையும் இப்பொழுதும் கூடத் தமிழ் நாட்டில் தமிழ் பேசும் பகுதியை மேலும் குறைக்கச் சதி நடப்பதை உணர வேண்டும். உதவாதினி தாமதம் உடனே விழி தமிழா! வேத‌னையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 2:42:00 AM

தெலுங்கானா பகுதி மக்கள் சார்பாளர்களைப் பார்த்தாவது ஒன்று பட்டுக் குரல் கொடுக்கும் துணிவும் உள்ளமும் வரவில்லையே! தமிழ் நாட்டில் தமிழரல்லாதவர்களே முதன்மைப் பொறுப்புகளில் இருப்பதே இவற்றிற்கெல்லாம் முதன்மைக் காரணமாகும். தமிழ் நாட்டுத் தமிழர்கள் விழித்தெழாவிட்டால் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் அழிவு நாளை தமக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்தாவது விழித்தெழ வேண்டும். உலகத்தமிழர்கள் நலன் நம் கைகளில்தான் உள்ளது என்பதை உணர்ந்து மனித நேய உணர்வுடனும் இனப்பற்றுடனும் ஆக்க முறைகளில் செயல்படவேண்டும். கட்சித் தலைமைகளுக்குக் கொத்தடிமையாக இருக்கும் நிலைகளில் இருந்து விடுபட வேண்டும். தமிழ் உணர்வாளர்களையே சார்பாளர்களாயும் தலைவர்களாயும் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் ஆண்டால் என்ன என்ற எண்ணமும் சிறு கண நேர ஆதாயங்களுக்கு இடம் கொடுக்கும் போக்கும் மாற வேண்டும். நம் மக்களின் துன்பங்களைத் துடைத்து அவர்கள் உரிமையுடன் வாழ நாம் உரிமையுடன் குரல் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். உரிமையுள்ள மக்களே பிறர் உரிமைக்காக உழைக்க முடியும் என்பதையும் உணர வேண்டும். நம் முன்னோர்களின் ஏமாளித்தனத்தால் தமிழ் மட்டுமே பேசிய இ

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 2:39:00 AM

ஒரே மொழி பேசும் பகுதியினர் என்றாலும் தங்கள் பகுதி நலனுக்காகத் தங்கள் கோரிக்கைகளைத் துணிந்து தங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிவித்துக் கட்சி வேறுபாடின்றிக் கிளர்ந்து எழுகிறார்கள். தமிழ் நாட்டிலோ என்றால் அடிமைத்தனத்தில் போட்டி போட ஒன்று படுகிறார்கள். நம் இனமே அழிந்த போதும் கூட அவன் முதலில் விலகட்டும் இவன் முதலில விலகட்டும் எனக் காத்து விலகல் நாடகம் ஆடினார்களே தவிர ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒன்றுபடவில்லை. இப்பொழுது கூட வதை முகாம்களில் இருபால் இளைஞர்களையும் அழித்துக் கொண்டு வருவதாயும் விடுதலைப்புலிகள் அடைக்கப்பட்டுள்ள வதைமுகாம் மீது போலியான கலவரம் நிகழ்நதது போல் காட்டி அனைவரையும் ஒட்டு மொத்தமாக அழிக்கத் திட்டமிட்டு்ளளதாகவும் செய்திகள் வருகின்றன. தெலுங்கானா பகுதி மக்கள் சார்பாளர்களைப் பார்த்தாவது ஒன்று பட்டுக் குரல் கொடுக்கும் துணிவும் உள்ளமும் வரவில்லையே! தமிழ் நாட்டில் தமிழரல்லாதவர்களே முதன்மைப் பொறுப்புகளில் இருப்பதே இவற்றிற்கெல்லாம் முதன்மைக் காரணமகும். தமிழ் நாட்டுத் தமிழர்கள் விழித்தெழாவிட்டால் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் அழிவு நாளை தமக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்தாவது வி

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 2:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக