வெள்ளி, 25 டிசம்பர், 2009

பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்கவேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா மனு



சென்னை, ​​ டிச.24: ​​ பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.​ பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.​ இதே கோரிக்கையை,​​ பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸýம் முன்னதாக எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.​ இதுகுறித்து மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்:​ பென்னாகரம் தொகுதியில் ஜனவரி 20}ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.​ பென்னாகரம் தொகுதி தி.மு.க.​ எம்.எல்.ஏ பெரியண்ணன் டிசம்பர் 1}ம் தேதி உயிரிழந்தார்.​ பேரவை உறுப்பினர் உறுப்பினர் இறந்த 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.​ ஆனால்,​​ பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் தேதியை ​ அறிவித்ததில் தேர்தல் ஆணையம் தேவையற்ற அவசரம் காட்டியுள்ளது.​ இது வியப்பை அளிக்கிறது.தமிழ்நாடு சட்டப் பேரவை ஜனவரி 6}ம் தேதி கூடுகிறது.​ பிரதான எதிர்க்கட்சியான அதி.மு.க.,​​ பேரவைக் கடமையாற்றுவதில் இடைத்தேர்தல் அறிவிப்பு குறுக்கிடுவது போல் உள்ளது.​ பேரவை கூடும் காலங்களில்,​​ பொதுவாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதில்லை.​ அதோடு,​​ தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சட்டப் பேரவையில் புதிய நலத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.​ இது ஆளும் தி.மு.க.வுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.​ சட்டப் பேரவை கூட உள்ள தகவலை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு மாநில அரசு கொண்டு சென்றிருக்க வேண்டும்.​ அதேபோல்,​​ தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஜனவரி 13 முதல் 16}ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.​ தமிழகத்தில் மிக முக்கியத் திருநாளாக பொங்கல் கொண்டாடப்படும்.​ அறிவித்துள்ளபடி,​​ பென்னாகரத்தில் ஜனவரி 20}ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றால்,​​ அத்தொகுதி மக்களின் பொங்கல் கொண்டாட்டம் பாதிக்கப்படும்.​ பொங்கல் கொண்டாட்டத்தின் காரணமாக,​​ பென்னாகரம் தொகுதி மக்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிரமமானதே.​ திருச்செந்தூர்,​​ வந்தவாசி இடைத்தேர்தல் பணிகள் நிறைவடையாதபோது,​​ பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்க அவசியமில்லை.இடைத்தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கு,​​ பொங்கல் பண்டிகையை அரசியல் கட்சிகள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தக் கூடும்.விழாக் காலங்களில் அறிவிக்கப்பட்ட தேர்தல்களை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளன.அதேபோல்,​​ பென்னாகரம் இடைத்தேர்தலையும் ஒத்திவைக்க தகுதியான காரணங்கள் உள்ளன.​ தமிழக மக்களும்,​​ பென்னாகரம் தொகுதி மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயலலிதா.
கருத்துக்கள்

அதிமுக பேரவைக் கடமையாற்றுவது என்பது கனவா? நகைச்சுவையா? ஆனால், முதலில் இராமதாசு தெரிவித்தாற்போன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இத் தேர்தலை பிப்ரவரிக்கு ஒத்தி வைப்பதுதான் நல்லது. தேர்தல் எப்பொழுது நடந்தாலும் அதிமுக இத் தொகுதியை மதிமுக விற்கு விட்டுக் கொடுப்பதுதான் நல்லது. தோல்வியடையும் இடத்தைத்தானே விட்டுக் கொடுக்கப் போகிறீர்கள்! அதனால் தீமை ஒன்றும் இல்லை. வெற்றி வாய்ப்பிற்கு அஞ்சியதால் விட்டுக் கொடுத்ததாகக் கூறுவோர் பற்றிக் கவலைப்பட வேண்டா.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக