புதன், 23 டிசம்பர், 2009

தொல்காப்பியர் கால ​ஆராய்ச்சி கருத்தரங்கு



சென்னை, ​​ டிச.​ 22:​ கோவிலூர் மடாலயமும்,​​ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும் தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கு சனிக்கிழமை ​(டிச.​ 26) தொடங்குகிறது.காரைக்குடி கோவிலூர் மடாலயத்தில் உள்ள கோவிலூர் ஆண்டவர் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கவுள்ள இந்த ஆராய்ச்சி கருத்தரங்கில்,​​ தொல்காப்பியர் காலம் தொடர்பாக அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களும்,​​ கால எல்லையும் தீர்மானமாகக் கொண்டு வரப்பட உள்ளன.மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் கோவிலூர் மடாலய மேலாண்மை மைய நிர்வாகி மெய்யப்பன்,​​ கோவிலூர் ஆதீனம் சீர் வளர் சீர் நாச்சியப்ப ஞான தேசிக சுவாமிகள்,​​ செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.ராமசாமி,​​ கருத்தரங்க அமைப்பாளர் பேராசிரியர் ஆறு.​ அழகப்பன்,​​ திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கருத்துக்கள்

நல்ல முயற்சி. பாராட்டுகள். தமிழின் சிறப்பை வேண்டுமென்றே பின்னுக்குத்தள்ளுவோரகளையும் போலியாக மிகையாகப் புகழ்ந்து உண்மை வரலாற்றை மறைப்போரையும் புறக்கணித்துவிட்டு நடுநிலையுடன் ஆராய்ந்துநலல முடிவெடுக்க வேண்டுகோள். தமிழ்க்கடல் மறைமலை யடிகள் தலைமையில் திருவள்ளுவர் ஆண்டு குறித்து எடுத்த முடிவு திருவள்ளுவர் தெ்ாடர் ஆண்டைப் பின்பற்ற பயனு்ள்ளதாக அமைந்துள்ளது. அதுபோல் ஒல்காப் புகழ் தொல்காப்பியர் ஆண்டைத் தமிழறிர்ஞர்கள் வரையறுக்கட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/23/2009 3:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக