வியாழன், 24 டிசம்பர், 2009

முடிவு எதிர்பார்த்ததே;​ இதே நிலை தொடராது: ஜெயலலிதாசென்னை, ​​ டிச.23: திருச்செந்தூர்,​​ வந்தவாசி ​(தனி)​ தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததுதான்.​ எனினும் இதே நிலை தொடராது என்று அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால்,​​ தேர்தல் சுதந்திரமாகவும்,​​ நியாயமாகவும் நடைபெற வேண்டும்.​ மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.​ ஆனால்,​​ தமிழகத்தைப் பொருத்தவரையில்,​​ கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க.​ ஆட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது.பணம்,​​ வன்முறை,​​ அதிகாரம் ஆகியவற்றின் மூலம் முதல்வர் கருணாநிதி ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருக்கிறார்.​ தி.மு.க.​ அரசு பொறுப்பேற்ற பிறகு,​​ எந்த தேர்தலிலும் மக்களின் தீர்ப்பு பிரதிபலிக்கவில்லை.தேர்தல் பிரசாரத்தின்போது,​​ தி.மு.க.​ அரசின் மீதான மக்களின் எதிர்ப்பலை தெளிவாகத் தெரிகிறது.​ ஆனால்,​​ தேர்தல் முடிவோ அதற்கு நேர்மாறாக உள்ளது.​ கடந்த மக்களவைத் தேர்தலின்போதும் அ.தி.மு.க.​ வெற்றி பெற வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக இருந்தது.​ ஆனால் தேர்தல் முடிவோ மக்களின் விருப்பத்திற்கு எதிராக இருந்தது.​ தி.மு.க.​ அரசின் ஜனநாயக விரோதப் போக்குக்கு எதிராகவும்,​​ தி.மு.க.வின் சட்டவிரோத செயல்களை தடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்தும்தான் முன்பு 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க.​ புறக்கணித்தது.​ திருச்செந்தூர்,​​ வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்.​ எனினும்,​​ தி.மு.க.வை எதிர்கொள்ள யாருமே இல்லை என்ற நிலை வரக் கூடாது என்ற எண்ணத்தில்,​​ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து,​​ அ.தி.மு.க.​ இந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டது.தி.மு.க.வினரின் அராஜக செயல்களுக்கு மத்திய அரசு உதவியாக இருந்து வருகிறது.​ ஆனால்,​​ இது நீண்ட நாளைக்கு நீடிக்காது.​ ஜனநாயகத்திற்கு விரோதமான சூழ்நிலை விரைவில் மாறும்.​ இந்த நம்பிக்கையின் அடிப்படையிலும்,​​ மக்கள் மீது நம்பிக்கை வைத்தும் அ.தி.மு.க.​ தனது ஜனநாயகக் கடமையை தொடர்ந்து ஆற்றும்.ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்களின் மூலம்தான் திருச்செந்தூர்,​​ வந்தவாசி தொகுதிகளில் தி.மு.க.​ வெற்றி பெற்றுள்ளது.​ இது தி.மு.க.விற்கு உண்மையான வெற்றியும் அல்ல;​ அ.தி.மு.க.விற்கு தோல்வியும் அல்ல.​ இது தி.மு.க.விற்கு கிடைத்த செயற்கையான வெற்றிதான்.​ இதைக்கண்டு அ.தி.மு.க.வினர் வருத்தப்படாமல்,​​ தொடர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் பணியாற்ற வேண்டும்.தி.மு.க.வினரின் அராஜகங்களையும் மீறி,​​ எனது வேண்டுகோளை ஏற்று அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும்,​​ அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்

அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்திருந்தால் இதே முறைகளில் வெற்றி பெற்று இதே மாதிரி அறிக்கையைத திமுக அளித்திருக்கும். எனவே, இவ்வாறெல்லாம் அறிக்கை விட்டுப் பயனில்லை என்பதை உணர்ந்து பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இனிமேலாவது செயல்பட வேண்டும். தேர்தலுக்காகத் தமிழ் ஈழ ஆதரவாளராகப் பேசியதைக் கனவாக எண்ணாமல் அதனால்தான் மூன்றில் ஒரு பங்கு இடங்களையாவது பிடிக்க முடிந்தது என்பதை உணர்ந்து தன் சொல்லில் மாறாமல் தமிழ் ஈழம் அமைய பரப்புரை மேற்கொண்டு வெற்றி காண வேண்டும். தமிழ் ந்லப் பணிகளிலும் மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபட்டால் வெற்றி மாலை தானாகத் தேடி வரும். அன்புடன் இலக்குவனார் திருள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/24/2009 2:51:00 AM

Election Result = One time(Briyani Kuruma + Gandhi Note) + Uneducated Public + Rowdism

By Sriraman
12/24/2009 1:40:00 AM

Miss JJ, you better go to banglore...no one will hear your voice any more... DMK is winning because they are doing good...with only money no one will win election...keep it in your mind.

By arun
12/24/2009 1:38:00 AM

எதிர் வரும் "பென்னாகரம்"தொகுதியில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அம்மா முன்வர வேண்டும். இதய சுத்தியோடு நீங்கள் மக்கள் சேவை ஆற்றுங்கள்.மக்கள் யார்,எப்படி பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வார்கள்.

By Ibnusalih.Abudhabi,uae.
12/24/2009 1:32:00 AM

Varam kettal kotuppathu.. Kadavul Aaatchi... Varam ketkaamal kotuppathu.. Kalaingar Aaatchi... Varankalai..Saapankalakkiyathu entha Aaatchi enpathai Makkal unarthuvittargal.... Panabalam...Tholiyin Kudumbathukku mattum entrathu verum aatchi... Panabalam...Tamil nadu makkalukku entradhu Kalaignar aatchii.. Kalaingar aatchii ... salugaigalai sonnalll. delhi M.L.A. election la kuda 50000 leadingla win pannuvomla..

By allaudien
12/24/2009 1:29:00 AM

வரப்போகும் 2011 சட்டமன்ற தேர்தலிலும் இதே மத்திய அரசாங்கம், இதே மாநில அரசாங்கம், இதே அதிகாரிகள், இதே தேர்தல் கமிஷன், இதே போலீஸ், இதே ரவுடிகள், இதே கரன்சி கண்டெய்னர்கள், இதே PBB(பணம், பாட்டில், பிரியாணி) என்ன செய்யப்போகிறீர்கள் மேடம்? காசு வாங்கி மக்களும் பழகிவிட்டார்கள். விலைவாசி, கரண்ட் கட், வேலையில்லா திண்டாட்டம், குடிநீர் பிரச்சினை, சுகாதாரம், போக்குவரத்து, சாலை வசதிகள், எதைப்பற்றியும் அரசியல்வாதிகள் கவலைப்பட வேண்டியதில்லை. யார் காசு அதிகமாக கொடுக்கிறார்களோ அவர்களுக்குதான் வாக்களிப்பார்கள். இன்றைய தேதியில் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க திமுகவால் முடியும். உங்களால் இரண்டாயிரத்து நூறு ரூபாய் கொடுக்க முடியுமா?

By Devaraj
12/24/2009 1:03:00 AM

Intha therthal mudivu elloralum ethipartha ontruthan. Entraikku makalidam ilipu unartchi varukratho antruthan tamil nattu malalukku nalathu.Suma priyani sapattaiyum panathaiyum kond konja natkalukku makalai yemartalam.thatku mathiya arasanakmum aatharavai kodukkalam.Ithellam idiavin peyarukkuthan koodathey oliya arasuyal vathikalukku illai. Thodarnthum tamilnattu arsanakthai kootanikka aatharavalipathu oru periya kuttavaliyai olitthu vaipathatku samam.Admk iyo vijiyakanthin katchiyaiyo meeri immurai vetri petru iruukalam.Neethi thoonki vitathu. Aneethikkum karuppu panthukkum kidaitha vtri vtriyey alla. Viraivil nala oru matram varum annal ellorukkum nalathu nadakkum.Muthlil entha oru india kidi makanum matchtchiyin padi nadakka katrukollunkal. jai gind

By indian
12/24/2009 12:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக