மேலும் 4 புதிய வட்டங்கள்; 2 வருவாய் கோட்டங்கள்: கருணாநிதி உத்தரவு
First Published : 25 Dec 2009 10:54:00 PM IST
சென்னை, டிச. 24: தமிழகத்தில் மேலும் நான்கு புதிய வட்டங்கள், இரண்டு வருவாய்க் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.சட்டப்பேரவையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை பிறப்பித்துள்ளார்.சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 30}ம் தேதி நடைபெற்ற வருவாய்த் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, "வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆம்பூர் வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பட்டை வட்டத்தை இரண்டாகப் பிரித்து, மடத்துக்குளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக மடத்துக்குளம் வட்டமும், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டத்தை மூன்றாகப் பிரித்து ஆலந்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆலந்தூர் வட்டமும் உருவாக்கப்படும்.சோழிங்கநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக சோழிங்கநல்லூர் வட்டம் ஏற்படுத்தப்படும்.வருவாய் கோட்டங்கள்... செங்கற்பட்டு வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கித் தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு "தாம்பரம் வருவாய்க் கோட்டம்' உருவாக்கப்படும்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி உடுமலைப்பேட்டைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக "உடுமலைப்பேட்டை வருவாய்க் கோட்டம்' ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நான்கு புதிய வட்டங்களையும், இரண்டு புதிய வருவாய் கோட்டங்களையும் உருவாக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்
பெரிய மாவட்டங்களைப் பிரிப்பதற்கு ஒரு நியாயம்! பெரிய மாநில்ங்களைப் பிரிப்பதற்கு ஒரு நியாயமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 3:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/25/2009 3:08:00 AM