சனி, 26 டிசம்பர், 2009

ஆந்திர ஆளுநர் மீது செக்ஸ் புகார்: விடியோ காட்சிகளை ​வெளியிட்டது தனியார் தொலைக்காட்சி



ஹைதராபாத், ​​ டிச.​ 25:​ ​ஆந்திரப்பிரதேச ஆளுநர் என்.டி.​ திவாரி ​(86) செக்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வெள்ளிக்கிழமை விடியோ காட்சிகளை வெளியிட்டது.​ ஆனால் இந்த விடியோ காட்சிகள் அனைத்துமே பொய் மூட்டை என நிராகரித்துள்ளது ஆளுநர் மாளிகை.​ இந்நிலையில்,​​ இந்த புகாரை அடுத்து ஆளுநர் மாளிகை எதிரில் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.​ ​​ ​ செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள ஆளுநர் பதவியில் நீடிப்பது அழகல்ல.​ அவராகவே பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்,​​ அல்லது மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஆந்திர சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு.​ சில வாரங்களாகவே தெலங்கானா ஆதரவு மற்றும் எதிர்ப்பு கலவரங்களால் ஆந்திர மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்துள்ளது.​ இந்நிலையில் ஆளுநர் மீது திடுக்கிட வைக்கும் புகாரை வெளியிட்டது ஏபிஎன்-ஆந்திர ஜோதி ​ தொலைக்காட்சி சேனல்.​ ​ ஆளுநரின் செக்ஸ் முறைகேடு தொடர்பான விடியோ காட்சி தொலைக்காட்சியில் வெளியாகும் என்று முன்னதாகவே ஆந்திர ஜோதி பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.​ அதற்கேற்ப காலை 10 மணியிலிருந்து சுமார் 1 மணி நேரத்துக்கு ஆளுநர் நாராயண் தத் திவாரி பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற விடியோ பதிவுகளை தொலைக்காட்சி வெளியிட்டது.​ ​​ கோர்ட் தடை:​​ இந்த காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பானால் அவப்பெயர்தான் மிஞ்சும் என்று அதிர்ந்த ஆளுநர் மாளிகை இந்த காட்சிகளை வெளியிடக் கூடாது என தடை விதிக்கும்படி ஆந்திரப்​ பி​ரதேச உயர்​ நீ​திமன்றத்தில் மனு செய்து அதற்கான உத்தரவையும் பெற்றது.​ அந்த உத்தரவை பஞ்சாரா ஹில்ஸ் பகுதி துணை போலீஸ் ஆணையர் அந்த தொலைக்காட்சிக்கு கொண்டு சென்று ஆளுநர் தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.​ உயர் ​நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட்டு ஆளுநர் சம்பந்தப்பட்ட விடியோ பதிவுகளை ஒளிபரப்பாமல் நிறுத்திக்கொண்டது தொலைக்காட்சி நிறுவனம்.​ தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ பதிவு ஆதாரமற்றது.​ ஆளுநர் தொடர்பான அந்த படப்பதிவு காட்சிகள் ஆதாரமற்றவை.​ 86 வயதுடையவர் ஆளுநர்.​ அவரது வயதுக்கு பொருத்தமில்லாத புகார் இது.​ ​ அரசமைப்புச் சட்ட பதவியில் அமர்ந்துள்ள கெüரவமிக்க நபர் மீது இத்தகைய குற்றச்சாட்டை சுமத்துவது அழகல்ல.​ தேவையில்லாமல் அவர் வம்பில் சிக்கவைக்கப்படுகிறார் என்று தொலைக்காட்சியின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.ஆளுநர் மாளிகை வழக்கறிஞர் ரவிசங்கர் ஜந்தியாலா பேசுகையில் ஆளுநரை தொடர்புப்படுத்தி தொலைக்காட்சி வெளியிட்ட செக்ஸ் புகார் செய்தி ஆதாரமில்லாதது.​ பரபரப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் இவை வெளியிடப்படுகின்றன.​ குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய் மூட்டைகள்தான்.​ இந்த புகார் அடிப்படையில் திவாரி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.​ மான நஷ்ட வழக்கு தொடருவோம்.​ ​ அந்த தொலைக்காட்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.காங்கிரஸ் கருத்து:​​ தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ பதிவின் நம்பகத்தன்மை குறித்து நடுநிலையாளர்களை கொண்டு விசாரித்து அறியவேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.​ இது தொடர்பாக இந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனீஷ் திவாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:​ இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது.​ எனவே இதுபற்றி கருத்து கூறுவது முடியாது.​ ​ கம்ப்யூட்டரை பயன்படுத்தி இந்த காட்சிகளை உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகப்படவும் தோன்றுகிறது என்றார் திவாரி.
கருத்துக்கள்

இத்தகைய புகார் வரப் போவது குறிதது விளம்பரப்படுத்தியதால்தான் ஆந்திர மாநிலக் கலவரங்கள் குறித்துக் கவலைப்படுபவர் போல் முதல்வரிடம் பேசினாரோ ஆளுநர். வேலையில்லையே என்று வேறு வேலையில் ஈடுபட்டார் போலும். உண்மையெனில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக