சென்னை, டிச.24: "ஓய்வுக்காக பெங்களூர் செல்லவில்லை' என்று முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் முதல்வர் புறப்பட்டார். அவருடன் மனைவி தயாளு அம்மாளும் டாக்டர்களும் சென்றுள்ளனர். செம்மொழி மாநாடு தொடர்பான குழுக்களின் கூட்டம் சென்னையில் டிசம்பர் இறுதியில் நடைபெற உள்ளது. எனவே, டிசம்பர் 28}ம் தேதிக்குள் முதல்வர் கருணாநிதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது பெங்களூர் பயணம் குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்தியில், ""நான் ஓய்வுக்காக பெங்களூர் செல்லவில்லை. நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குக் கடிதங்களைக் கொண்டு ஒரு தோரணவாயில் அமைக்கும் ஆர்வத்தோடுதான், இந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.தமிழ் மொழியாம் செம்மொழியின் மேன்மையையும், தமிழறிஞர்களின் சிறப்பையும் தனது அறிக்கையில் புகழ்ந்து தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், திருச்செந்தூர், வந்தவாசி (தனி) தொகுதி இடைத் தேர்தல் வெற்றி குறித்து குறிப்பிட்டுள்ளார்.""குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு; தானாகவே தாழ்ந்துவிடும்' என்ற வள்ளுவரின் குறள் உள்ளது. இந்தக் குறளைப் படிக்காதவர்கள்; படித்திருந்தாலும் அதன்படி நடக்க முனையாதவர்கள்}நடக்கவே நினையாதவர்கள் நடத்திய அரசு முடிவுற்றது. அடுத்து வந்த திமுக அரசு, "நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்' என்ற குறளைத் தன் கொள்கை முழக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எச்சரிக்கையாகவும், அடக்க உணர்வோடும் நடந்து கொள்வதன் காரணமாக தமிழ் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு திருச்செந்தூரும், வந்தவாசியும் சான்றுகளாக நிற்கின்றன. "குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு' என்பதை மறவாமால் ஆட்சிப் பணியை செங்கோன்மை சிறக்க நடத்துவோம் என்பதற்கான உறுதியை எடுத்துக் கொள்வோம். இதற்கு வந்தவாசியும், திருச்செந்தூரும் வழங்கிய இரு வெற்றிகளையும் பயன்படுத்த சூளுரைப்போம். அதைத் தொடர்ந்து மேற்கொள்வோம்' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்
மகள் வீட்டிற்குச் செல்வதை எல்லாம் அரசியல் செய்தியாக்க வேண்டா. உழைப்பவர்களுக்கு ஓய்வு என்பது மாற்றுப்பணி ஈடுபாடே தவிர உறக்கம் அன்று. எனவே, கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி இம்மாநாடு தொடங்கும் நாளுக்குள் தமிழ் நாட்டில் எல்லா நிலைகளிலும் தமிழை வீற்றிருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க ஆழ்ந்து சிந்தித்து உடன் செயல்படுத்தட்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 2:33:00 AM
12/25/2009 2:33:00 AM
Simply waste news! No comments!
By Thillalankadi
12/25/2009 1:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/25/2009 1:22:00 AM
First Published : 25 Dec 2009 10:23:00 PM IST