பெங்களூர், அக்.25: கர்நாடகத்தில் அமைச்சர்கள் ஜனார்தன ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோர் உள்பட 7 பாஜக எம்எல்ஏக்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பெங்களூர், பெல்லாரியில் சுமார் 60-65 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சில சுரங்க நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. எம்எல்ஏக்களை விலைபேச குதிரை பேரம் நடத்தப்படுவதாக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வந்தன.இந்நிலையில் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/26/2010 2:42:00 AM
10/26/2010 2:42:00 AM


By M. Annamalai
10/25/2010 9:04:00 PM
10/25/2010 9:04:00 PM


By M. Annamalai
10/25/2010 8:54:00 PM
10/25/2010 8:54:00 PM


By manoharan
10/25/2010 5:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 10/25/2010 5:05:00 PM