புதுதில்லி, அக்.26: ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதும் அதை ஆக்கிரமித்துக்கொண்டது என்பதாக சமீபத்தில் கருத்தரங்கு ஒன்றில் அருந்ததிராய் பேசியது பற்றி மத்திய அமைச்சரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பேச்சுரிமை உள்ளது. அதை அளவுக்கு மீறி பயன்படுத்தி வாயில் வந்தபடி சிலர் பேசி நாட்டுக்குக் கேடு விளைவித்துவிடுகிறார்கள். அதுபோன்றதுதான் அருந்ததி ராயின் வரம்பு மீறிய பேச்சு என அவர் இங்கு நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறினார்.இது போல பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நாட்டுக்கு நல்லதா அல்லது கெட்டதா என ஒரு முறைக்கு பல முறை ஆத்மபரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.சட்டம் நமக்கு அளித்துள்ள பேச்சுரிமையை தவறான முறையில் பயன்படுத்திவிட்டோம் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாமல் எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என புரிந்து பேசுவது அருந்ததிராய் போன்றவர்களுக்கு நல்லது என்றார் அவர்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 3:11:00 AM
10/27/2010 3:11:00 AM


By kmr
10/27/2010 1:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/27/2010 1:22:00 AM